Tamilnadu

News March 27, 2024

தேனி: டிடிவி தினகரன் வேட்புமனு தாக்கல்

image

தேனி மக்களவை தொகுதியின் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர், டிடிவி தினகரன் தேனி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார் . உடன் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 27, 2024

டி.ஆர்.பாலு செய்யாத திட்டங்களை நான் செய்வேன்

image

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் டி.ஆர்.பாலு மீண்டும் அவர் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.டி.ஆர்.பாலு செய்யாத பல திட்டங்களை நான் வெற்றி பெற்றால் செய்வேன் என  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேணுகோபால் இன்று தெரிவித்தார். 

News March 27, 2024

திண்டுக்கல்: இந்து எழுச்சி பேரவை வேட்புமனு

image

வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட
இந்து எழுச்சி பேரவை சார்பில் சதீஷ் கண்ணா என்பவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று வருகை புரிந்தார். பின்னர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பூங்கொடியிடம் தனது வேட்பு மனுவை வழங்கினார். உடன் நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

News March 27, 2024

திண்டுக்கல்: போக்குவரத்து நெரிசல்

image

திண்டுக்கல் மாவட்டம் பூமாரக்கெட் பின்புறம் மருத்துவமனை செல்லும் சாலையில் இன்று இருசக்கர வாகனங்கள் சாலையில் அத்துமீறி நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இவ்வழியாக நாள் தோறும் கனரக வாகனங்கள் பஸ்கள் போன்றவை செல்லும். இச்சாலையில் அடிக்கடி இதுபோன்று இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

News March 27, 2024

செங்கல்பட்டு: சுயேச்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

image

ஸ்ரீபெரும்புதூா் மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் சரவணன் இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.

News March 27, 2024

தமாகா வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

image

 தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேணுகோபால் மிதிவண்டியில் தனது ஆதரவாளர்களுடன் வந்து ஸ்ரீபெரும்புதுார் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்-27) வேட்பு மனு தாக்கல் செய்தார்.

News March 27, 2024

பைக் மோதி மூதாட்டி பலி

image

மைக்கேல்பட்டியைச் சேர்ந்த கலியபெருமாள், மனைவி சம்பூர்ணம்(70). இவர் சம்பவத்தன்று சாலையோரம் நடந்து சென்றபோது பின்புறம் வந்த அடையாளம் தெரியாத பைக் மோதியதில் படுகாயமடைந்தார். திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 27, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 15252 பேர் தேர்வெழுதினர்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வினை மாவட்டம் முழுவதும் உள்ள 78 தேர்வு மையங்களில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி மேல்நிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகளில் பயிலும் 7688 மாணவா்கள் மற்றும் 7564 மாணவிகள் என மொத்தம் 15252 தேர்வர்கள் தேர்வெழுதினர்.

News March 27, 2024

சென்னை: வீடு வீடாக அதிமுக வாக்கு சேகரிப்பு

image

திருவொற்றியூர் பகுதி ஏழாவது வார்டில் மாமன்ற உறுப்பினர் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சரவணா நகர் மற்றும் ஆர்.எம்.வீ நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று, ஏழாவது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.கார்த்திக் அவர்கள் வடசென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ அவர்களுக்கு ஆதரவாக இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார் உடன் வட்டக் கழக செயலாளர் ரவிச்சந்திரன் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

News March 27, 2024

காஞ்சிபுரம்: திமுக ஆலோசனை கூட்டம்

image

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தீவர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக சார்பில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தேரடி பகுதியில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பூத் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் உத்திரமேரூர் எம்.எல்.ஏ சுந்தர் தலைமையில் நடைபெற்றது.

error: Content is protected !!