Tamilnadu

News March 27, 2024

நாடாளுமன்ற அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

image

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் போளூர் ஒன்றிய அதிமுக சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்ற அதிமுக தேர்தல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. அதில் போளூர் சட்டமன்ற உறுப்பினர் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். அதில் திரளான அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 27, 2024

விழுப்புரம் வேலைவாய்ப்பு முகாமில் 72 பேருக்கு பணி

image

விழுப்புரம் இஎஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று (மார்ச் 26) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு இஎஸ் கல்வி குழுமத்தின் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். 8 முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்ற இந்த முகாமில் 72 மாணவ மாணவிகள் பணி நியமன ஆணையை பெற்றனர். இதில் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

News March 27, 2024

10ம் வகுப்பு பொதுத்தேர்வு 776 பேர் “ஆப்சென்ட்”

image

மதுரை மாவட்டத்தில் நேற்று துவங்கிய 10ம் வகுப்பு தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட பொதுத்தேர்வினை 488 பள்ளிகளை சேர்ந்த 38 ஆயிரத்து 389 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்வுகளுக்காக மாவட்டம் முழுவதும் 145 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் நேற்று 37 ஆயிரத்து 613 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 776 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.

News March 27, 2024

ஈரோடு : திமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.4.89 கோடி

image

ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில், வேட்பாளர் கே.இ.பிரகாஷ் போட்டியிடுகிறார். இந்நிலையில் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் பெயரில் மொத்தம் ரூ.4.89 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக வேட்புமனு பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். மேலும், பிரகாஷ் பெயரில் ரூ.3,96,849 மற்றும் மனைவி பெயரில் ரூ.35,56,310 கடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 27, 2024

வேலூர் தேர்தல் பொது பார்வையாளர் வருகை

image

பாராளுமன்ற பொதுத்தேர்தல்  முன்னிட்டு வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள  ரூபேஷ் குமார் அவர்களை வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும்,  கலெக்டருமான சுப்புலெட்சுமி இன்று (மார்ச் 27) சுற்றுலா மாளிகையில் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News March 27, 2024

தொண்டி அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம்

image

தொண்டி: திருநகர் பகுதியில் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் தொண்டி போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசார் அடையாளம் தெரியாத சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த முதியவர் குறித்து விசாரணை நடத்தினர்.

News March 27, 2024

சிறை காவலர்கள் 3 பேர் சஸ்பெண்ட்!

image

கடலூர் மத்திய சிறையில் தண்டனை கைதியாக இருந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, போலீஸ் காவலை மீறி நேற்று முன்தினம் தப்பி ஓடினார். இது தொடர்பாக பாதுகாப்பில் அஜாக்கிரதையாக இருந்த சிறை காவலர்கள் கதிர்வேல், பிரபாகரன், கோவர்தன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சிறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

News March 27, 2024

பத்தாம் வகுப்பு தேர்வு 353 பேர் ஆப்சென்ட்

image

தமிழகம் முழுவதும் பத்தாம் பொதுத்தேர்வு நேற்று (மார்ச் 26) தொடங்கியது. இதில் வேலூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் உள்ள 103 தேர்வு மையங்களில் 9320 மாணவர்கள், 9350 மாணவிகள் என மொத்தம் 18670 பேர் தேர்வு எழுதினர். இதில் 353 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகினர். என வேலூர் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 27, 2024

மயிலாடுதுறை:காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தலுக்காக பாதுகாப்பு பணி மற்றும் தொடர் வாகன சோதனைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா காவல் நிலையம் , கட்டுப்பாட்டு அறை , வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கினார்.

News March 27, 2024

அமைச்சர் பொன்முடி நடத்தை விதிகளை மீறியதாக புகார்

image

விழுப்புரம் அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நேற்று (மார்ச் 26) தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பழனியிடம் அளித்த மனுவில், வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் 100 மீட்டருக்கு முன் வாகனத்தை நிறுத்த வேண்டும். ஆனால், விசிக வேட்பாளருடன் மனு தாக்கல் செய்ய வந்திருந்த அமைச்சர் பொன்முடி ஆட்சியர் அலுவலகத்திற்குள் காரில் வந்தார்‌. தேர்தல் நடத்தை விதிகளை மீறிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறப்பட்டிருந்தது.

error: Content is protected !!