Tamilnadu

News March 26, 2024

Breaking: மயிலாடுதுறை வேட்பாளர் யார்?

image

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இதுவரை 405 வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.மற்றொரு பக்கம் கூட்டணி கட்சித் தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.மயிலாடுதுறை தொகுதிக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து திருநாவுக்கரசர், பிரவீன் சக்கரவர்த்தி, மீரா ஹுசைன்,மற்றும் ஹசீனா சைய்யது பெயர்கள் அடிபட்டு வருகிறது.

News March 26, 2024

தென்காசி ஆட்சியருக்கு அதிரடி உத்தரவு

image

சங்கரன்கோவிலில் போலீஸ் விசாரணையின்போது வேன் டிரைவர் கடந்த மார்ச் 8 ஆம் தேதியன்று, உயிரிழந்தார்.இதனிடையே, வேன் டிரைவர் இறந்ததற்கு இழப்பீடு மற்றும் வேலை வழங்க கோரி முருகனின் மனைவி மீனா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். ஓட்டுநரின் மனைவி மீனா தொடர்ந்த வழக்கில் இன்று அங்கன்வாடி பணி வழங்க தென்காசி ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

News March 26, 2024

திருச்சியின் மெட்ரோ வழித்தடங்கள் அறிவிப்பு!

image

திருச்சியின் மெட்ரோ வழித்தடங்கள் நேற்று வெளியிடப்பட்டது. சமயபுரம் முதல் வயலூர் வரை செல்லும் வழித்தடத்தில் 17 நிறுத்தங்கள் இடம் பெற்றுள்ளன. துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரை செல்லும் வழித்தடத்தில் 16 நிறுத்தங்களும் வழி 1 – சமயபுரம் முதல் வயலூர் (18.7 கி.மீ)
வழி 2 – துவாக்குடி முதல் பஞ்சப்பூர் (26 கி.மீ) வழி 3 – ஜங்ஷன் முதல் பஞ்சப்பூர் (23.3 கி.மீ) அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 26, 2024

சாமிதோப்பில் நெல்லை பிஜேபி வேட்பாளர்

image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள புகழ்மிக்க அய்யாவழி இயக்கத்தின் தலைமைபதியான சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமிபதியில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இன்று சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் நாகர்கோயில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி, அய்யா வழி பாடகர் சிவச்சந்திரன் மற்றும் பாஜகவினர் வந்திருந்தனர்.

News March 26, 2024

ராமநாதபுரத்தில் மேலும் 3 ஓபிஎஸ்’கள் மனுதாக்கல்

image

நாமநாதபுரம் மக்களவை தொகுதியில் சுயேட்சையாக ஓ.பி.எஸ் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஓ.பி.எஸ் என்ற பெயரில் நேற்று ஒருவர் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தார். அதேபோல் இன்று மேலும் 3 பேர் ஓபிஎஸ் என்ற பெயரில் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர். ஒரே பெயரில் 5 பேர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 26, 2024

பெரம்பலூர் மற்றும் சிதம்பரம் தேர்தல் புறக்கணிப்பு

image

மருத்துவ சமுதாய மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 5 % உள் ஒதுக்கீடு மற்றும் சட்ட பாதுகாப்பு வேண்டி அனைத்து கட்சியினருக்கும் மனுவாக அளித்தனர். எந்த கட்சியும் அதற்கு செவி சாய்க்கவில்லை. அதனால் பெரம்பலூர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் புறக்கணிப்பு என்று பெரம்பலூர் மாவட்ட மருத்துவ சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர், பொருளாளர் பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News March 26, 2024

திருச்சி மாவட்டத்தில் 33,809 பேர் 10 வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள்

image

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கிய நிலையில் திருச்சி மாவட்டத்தில் 16,983 மாணவர்களும், 16,826 மாணவிகளும் என மொத்தம் 33,809 பேர் தேர்வு எழுதுகின்றனர். 169 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இதில் 63பேர் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுகின்றனர். திருச்சி மத்திய சிறைச்சாலையை சிறு கைதிகள் 9 பேர் 10வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். 

News March 26, 2024

சென்னை: டி.ஆர் பாலுவுக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர்

image

சென்னை, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எம்.பி டி.ஆர்.பாலுவை, அமைச்சர் சேகர்பாபு இன்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார்.அப்போது, அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று கூறி அமைச்சர் சேகர்பாபு வாழ்த்து தெரிவித்தார். அருகில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜோசப் சாமுவேல், காரப்பாக்கம் கணபதி மற்றும் பகுதி செயலாளர் உட்பட பலர் இருந்தனர்.

News March 26, 2024

திருப்பத்தூரில் கலெக்டர் ஆய்வு

image

தமிழக முழுவதும் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது. இதனையடுத்து இன்று திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு மையங்களில்
10ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவ, மாணவிகள் எழுதினர். இதனை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் திடிரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News March 26, 2024

திருச்சியில் எம்.எல்.ஏ அறிக்கை!

image

திருச்சி எம்எல்ஏ இனிகோ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், பாஜகவுக்கு தமிழக மக்கள் வாக்களித்தால் அது பெரும் அவமானம் எனச் முதல்வர் ஸ்டாலின் விளாசி உள்ளதாக கூறினார் . ஒருவேளை மீண்டும் மோடியே ஆட்சிக்கு வந்து விட்டால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும் என முதல்வர் கூறியதை நினைவு கூர்ந்துள்ளார்.

error: Content is protected !!