Tamilnadu

News March 26, 2024

ராணிப்பேட்டை: 2 பேருக்கு வெட்டு

image

பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் இன்று அரக்கோணம் வந்து கொண்டிருந்தது. அப்போது, பொதுப் பெட்டியில் சீட் பிடிக்கும் தகராறில் மும்பையை சேர்ந்த 3 பெண்கள் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சேகர் மற்றும் ஒரு வாலிபரை பிளேடு மற்றும் நகங்களால் கிழித்துள்ளனர். இதில் ரத்த காயம் அடைந்த இருவர் அரக்கோணம் ரயில்வே போலீசில் புகார் கொடுத்தனர் மூன்று பெண்களிடம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 26, 2024

சென்னை: கமல்ஹாசனிடம் வாழ்த்து பெற்ற திமுக வேட்பாளர்கள்

image

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் இல்லத்தில் திமுக வேட்பாளர்கள் இன்று நேரில் சந்தித்தனர். அப்போது மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தயாநிதிமாறன், வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர். அருகில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா , சிற்றரசு உட்பட பலர் இருந்தனர்.

News March 26, 2024

விருதுநகர் அருகே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

image

அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படும் வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் திருநெல்வேலியில் இருந்து பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதுபோல துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News March 26, 2024

திருச்சியில் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை.!

image

திருச்சியில் கடந்த 2019ம் ஆண்டு ஏர்போர்ட் பகுதியில் டிபன் கடை நடத்தி வந்த உமா சத்தியா என்பவர் சிவசண்முகம் என்பவரை தனது கடைக்கு வரக்கூடாது என்று சொன்னதால், ஆத்திரமடைந்த சிவசண்முகம் உமாவை கத்தியால் குத்தி படுகொலை செய்தார். இதுகுறித்த வழக்கு, இன்று திருச்சி 3வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சிவசண்முகத்திற்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

News March 26, 2024

புதுகையில் மருத்துவக் கல்லூரியில் எம்எல்ஏ ஆய்வு

image

புதுகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த இரண்டு தினங்களாக பல்வேறு கோரிக்கைகளை தொலைபேசி வாயிலாக பொதுமக்கள் தெரிவித்து வந்த நிலையில், இன்று நேரடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று கோரிக்கை வந்தவர்களிடம் அது குறித்து கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய மருத்துவ பணியாளர்களை அறிவுறுத்தினார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா உடன் நிர்வாகிகள் மருத்துவர்கள் இருந்தனர்.

News March 26, 2024

கடலூரில் இலவச எலும்பியல் மருத்துவ முகாம்

image

கடலூர் சூரியா ஆர்த்தோ கிளினிக் நடத்தும் இலவச எலும்பியல் மருத்துவ முகாம் வரும் 31-ம் தேதி வரை, கடலூர் முதுநகர் அருகே உள்ள சூரியா ஆர்த்தோ கிளினிக்கில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை (மகேந்திரா கார் ஷோரூம் எதிரில்) நடைபெறுகிறது. முகாமில், எலும்பு முறிவு, கால் மூட்டு வலி, நீண்ட நாள் கழுத்து வலி உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்குவதுடன் மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.

News March 26, 2024

நாமக்கல் ரூ.5 நாணயங்களாக செலுத்தி வேட்புமனு 

image

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவர் டெபாசிட் தொகை ர. 25 ஆயிரத்தை 5 ரூபாய் நாணயங்களாகக் கொண்டு வந்து ஆட்சியர் அலுவலகத்தில் செலுத்தி, தனது வேட்பு மனுவை சுயேச்சை வேட்பாளராக இன்று 26.03.2024 தாக்கல் செய்தார். ரூ. 5 நாணயத்தை தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட அலுவலர்கள் சுமார் 1 மணி நேரம் எண்ணி கணக்கிட்டு அவருக்கு ரசீது வழங்கினார்கள்.

News March 26, 2024

தென்காசி வேட்பாளர் ராணி வேட்பு மனு தாக்கல்

image

தென்காசி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் அறிமுக கூட்டம் சங்கரன்கோவிலில் உள்ள கலைஞர் திடலில் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் நடந்தது. இதைத்தொடர்ந்து தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் இன்று கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

News March 26, 2024

பெரம்பலூர்: ரூ.126 கோடி செலவு செய்துள்ளேன்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களைக்கட்டியுள்ள நிலையில், பெரம்பலூர் பாஜக வேட்பாளராக பாரிவேந்தர் போட்டியிடுகிறார். இந்நிலையில், ரூ.126 கோடி என் சொந்த நிதியில் இருந்து தொகுதிக்காக செலவு செய்துள்ளதாக கூறிய பாரிவேந்தர், மீண்டும் தன்னை தேர்ந்தெடுத்தால் 1200 மாணவர்களை எஸ்ஆர்மில் இலவசமாக படிக்க வைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

News March 26, 2024

விஜய் வசந்த் நாளை வேட்புமனு தாக்கல்

image

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் விஜய் வசந்த் நாளை
(27.03.24) காலை 10:30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கின்றார். இதில் காங்கிரஸ் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, மக்கள் நீதி மையம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

error: Content is protected !!