India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் இவர் அதிமுகவில் தொண்டராக பணியாற்றி தற்போது திருப்பத்தூர் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட கழக செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில், சொந்த காரணங்களுக்காக கழக செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தனது ராஜினாமா கடிதத்தை முன்னாள் அமைச்சருக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போளூர் அடுத்த சந்தவாசல் விளக்கங்கள் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்ற முதியவரை அதே பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் சதீஷ் மற்றும் சுதா ஆகியோர் தங்கள் ஊரில் நடைபெற்ற தேர் திருவிழாவிற்கு பங்கு பணம் கேட்டு முதியவர் மூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட முதியவர் மூர்த்திசந்தவாசல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஜெய்சங்கர், சதீஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.
தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த முனியசாமி என்பவரை அதே பகுதியை சேர்ந்த சகோதரர்கள் சதீஷ் சுதாகர் தங்களது தாயுடன் தகாத உறவு வைத்திருந்ததற்காக நேற்று முன்தினம் வெட்டிக்கொலை செய்தனர். இந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் இவர்களின் தாயார் நிர்மலா நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் ரவுண்டு ரோட்டில் அமைந்துள்ள நாயுடு கல்யாண மஹாலில் மகளிருக்கான சமையல் போட்டி வருகிற (மார்ச்30)ந்தேதி நடைபெறுகிறது . இதற்கு அனுமதி இலவசம். இப்போட்டிக்கு தீர்ப்பாளராக CHEF.தாமோதரன் அவர்கள் வருகை தருகிறார். பாட்டி சமையல் என்ற தலைப்பில் இப்போட்டியானது நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்குபெற விரும்புகிறவர்கள் விண்ணப்படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்
மார்ச் 29ஆம் தேதி புனித வெள்ளி மற்றும் வார இறுதி விடுமுறைகளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் சார்பில் நாளை முதல் வரும் 1ம் தேதி வரை 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் பொன்முடி தெரிவித்துள்ளார். சேலம், பெங்களூர், சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் மலையரசன் இன்று காலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது டீக்கடையில் டீ ஆற்றி பொதுமக்களிடம் டீ கொடுத்து விட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து பெண்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். உங்கள் ஓட்டை எனக்கு அளிக்க வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்
மாதாவரம் அடுத்த ஆசசி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் மஞ்சம்பாக்கம் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி. இவர்களது கோவிந்தன், பிரபு என 2 குழந்தைகள் 8ம் வகுப்பு படிக்கும் நிலையில், பிரபு நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் அணையில் சேமித்து வைத்திருந்த மழை நீர் மார்ச் 2 முதல் 27-ம் தேதி வரை 25 தினங்களுக்கு பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது. இன்று அணையில் 25 கன அடி நீர் இருப்புடன் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுவதாகப் பொதுப் பணித் துறை நிர்வாகம் பொதுமக்கள் & விவசாயிகளுக்கு அறிவித்தனர்.
திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கான அதிமுக தலைமை தேர்தல் அலுவலகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளின் நிலை குறித்து இன்று அதிமுக வேட்பாளர் கருப்பையா, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். உடன் இப்பகுதி அதிமுகவினர் இருந்தனர்.
தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை கேயம்பேடு பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தள்ளுவண்டி கடை ஒன்றில் வடை சாப்பிட்டு, பணத்தை செல்போனில் அனுப்பினார். தொடர்ந்து, தள்ளுவண்டி கடை வரை டிஜிட்டல் பேமெண்ட் வந்துள்ளதாக கூறி வாக்கு சேகரித்தார். இதற்கு முன்னதாக பெரிய உணவகங்களில் மட்டும் டிஜிட்டல் பேமெண்ட் இருந்த நிலையில், தற்போது சிறிய கடைக்கு கூட டிஜிட்டல் பேமெண்ட் முறை இருப்பதாக தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.