India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எண்ணூர் காமராஜர் நகர் பகுதியில் பழமை வாய்ந்த வட திருச்செந்தூர் திருமுருகன் கோவிலில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது யாகசாலை அமைத்து கலசங்கள் வைத்து சிறப்பு பூஜை செய்து முருகன் மற்றும் வள்ளி தெய்வானை சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. எண்ணூர் பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று துவங்கி ஏப்ரல் 8 வரை நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரை விருதுநகர் சிவகாசி இரு கல்வி மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற தமிழ் தேர்வில் 22,005 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். ஆனால் 10,589 மாணவர்கள் 10,924 மாணவிகள் என 21,513 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 492 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
திருச்சி ஜங்ஷன் கல்லுக்குழி அருகே உள்ள ரயில்வே விளையாட்டு மைதான ஸ்டேடியத்தில், ரயில்வே ஊழியர்களுக்கான மாபெரும் வாலிபால் சாம்பியன்ஷிப் (ஆண்கள்) போட்டி இன்று நடைபெற்றது. இதனை திருச்சி ரயில்வே கோட்டத் துணை மேலாளர் செல்வன் தொடங்கி வைத்தார். இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட ஆறு மண்டல ரயில்வே ஊழியர்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை நகர் பகுதியில் இன்று அதிமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது இந்த நிலையில் புதுக்கோட்டை நகரில் அதிமுகவினர் கோவில்பட்டி, திருக்கோகர்ணம் பகுதிகளில் மகளிர் அணி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு ஆதரவாக வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
நாமக்கல் லோக்சபா தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக வருமான வரித்துறை அதிகாரி அர்ஜூன் பேனர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள் நாமக்கல் நகருக்கு வந்து தேர்தல் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.தேர்தல் பார்வையாளர்களுடன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் ஆகியோர் இன்று 27.03.2024 ஆலோசனை நடத்தினார்கள்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் களைகட்ட தொடங்கிய நிலையில் தற்போது அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் பாபு மாவட்டத்தின் சமனிலை பகுதியான கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார். முன்னதாக கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் உள்ள கங்கை அம்மன் வழிபட்டு அப்பகுதியில் உள்ள மீனவர்களிடம் வாக்கு சேகரித்தார்.
இன்று (27.03.2024) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக விருந்தினர் மாளிகையில் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி பொதுத் தேர்தல் பார்வையாளர் பூபேந்திர எஸ்.சௌத்ரி, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் அவர்களுடன் பாராளுமன்ற பொதுத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் உடன் இருந்தனர்.
நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா இல்ல நிகழ்ச்சி இன்று (மார்ச் 27) நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். மேலும், இதில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனும் பங்கேற்றார். தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு எதிர் எதிர் கட்சிகளான அதிமுக, பாஜக நிர்வாகிகள் ஒரே மேடையில் சங்கமித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பாமக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் இன்று நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சண் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசியில் இன்று ஒரே நாளில் குவிந்த வேட்பாளர்கள்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தென்காசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட கடைசி நாளான இன்று 24 வேட்பாளர்கள் வந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் தற்போது பரபரப்பாக உள்ளது. ஏற்கனவே 12 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் தற்போது 36 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.