Tamilnadu

News March 30, 2024

ஈரோடு: 2000 பேருக்கும் தபால் வாக்கு

image

ஈரோடு மாவட்டத்தில், மக்களவை தேர்தலில் பணியாற்றும் அனைத்து போலீசாருக்கும் மொத்தம் 2,050 பேருக்கும் தேர்தல் ஆணையம் மூலம் தபால் வாக்கு செலுத்தும் படிவம் விநியோகம் செய்யப்பட்டது. இதில் விடுமுறையில் உள்ள 50 பேர் தவிர்த்து மீதமுள்ள 2,000 பேருக்கும் தபால் வாக்கு அளிக்கும் படிவம் வழங்கப்பட்டுள்ளது. இதனை போலீசார் தகுந்த ஆவணத்துடன் பூர்த்தி செய்து தேர்தல் பிரிவு போலீசாரிடம் வழங்கப்பட்டது.

News March 30, 2024

புதுச்சேரிக்கு மாற்றம் தேவை எடப்பாடி பழனிசாமி பேச்சு

image

மக்களவை தேர்தலையொட்டி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுச்சேரி தொகுதியில் சூறாவளி பிரச்சாரத்தை இன்று (30-3-2024) மேற்கொண்டார். புதுச்சேரி உப்பளம் சாலை, புதிய துறைமுகம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கலந்து கொண்டு புதுச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து வாக்கு சேகரித்தார். புதுச்சேரி மக்கள் மாற்றத்தை விரும்புவதாக கூறினார்.

News March 30, 2024

கடலூரில் காய்கறிகள் மூலம் விழிப்புணர்வு

image

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கடலூர் பேருந்து நிலையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர்கள் இன்று காய்கறிகள் மூலம் கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை கலெக்டர் அருண்தம்புராஜ், கோட்டாட்சியர் அபிநயா, மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ருதி ஆகியோர் பார்வையிட்டனர்.

News March 30, 2024

கடலூர்: வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

image

கடலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் இன்று மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டார். அப்போது வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது தேர்தல் பொது பார்வையாளர் டாரப் இம்சென் , மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

News March 30, 2024

சென்னையில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது

image

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் குடிநீர் தேவை அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாக 1000 மில்லியன் லிட்டருக்கு அதிகமாக சப்ளை செய்யப்படுகிறது. ஒரு நாளில் அதிகபட்சமாக நேற்று 1071.4 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்பட்டுள்ளது.  சராசரியாக 1014 மி. லிட்டர் தண்ணீர் குடிநீர் குழாய் மற்றும் டேங்கர் லாரிகள் மூலம் சென்னையில் உள்ள குடியிருப்புகளுக்கும் அனுப்பப்படுகிறது.

News March 30, 2024

திருப்பத்தூர்: உயிர் தப்பிய பயணிகள்

image

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் இருந்து இன்று மாலை 5 மணியளவில் ஏலகிரி மலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

News March 30, 2024

ராமநாதபுரம்: கோயிலில் வழிபட்டு பிரச்சாரத்தை தொடங்கினார்

image

ராமநாதபுரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் பா.ஜெயபெருமாள், அதிமுக நிர்வாகிகளுடன் ரெகுநாதபுரம் வல்லபாய் ஐயப்பன் திருக்கோயிலில் இன்று வழிபாடு செய்த பின் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பதற்கான பிரச்சார பயணத்தை கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து துவங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் முனியசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் சென்றனர்.

News March 30, 2024

வேலூர்: 5 வேட்பாளர்கள் வாபஸ்!

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் என மொத்தம் 50 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் 37 வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்ட நிலையில், இன்று(மார்ச் 30) மதியம் 1 மணி வரை 5 வேட்பாளர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெற்றுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

News March 30, 2024

நெல்லை களத்தில் 23 வேட்பாளர்கள்!

image

நெல்லை மக்களவை தொகுதியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், அதிமுக மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சியான நாம் தமிழர் ஆகியவற்றின் வேட்பாளர்கள் 5 பேர், 18 சுயேச்சைகள் என 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று 3 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர். சுயேச்சைகளுக்கு சின்னங்களும் ஒதுக்கப்பட்டன.

News March 30, 2024

திருப்பூர்: விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டிய கலெக்டர்

image

திருப்பூர் மக்களவை தொகுதியில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று(மார்ச் 30) திருப்பூர் காமராஜ் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் தவறாமல் அனைவரும் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கரை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பேருந்துகளில் ஒட்டினார்.

error: Content is protected !!