India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். தேர்தல் பரப்புரைக்காக இன்று ஈரோடு வருகை தந்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, திமுக வேட்பாளர் பிரகாஷ் உள்ளிட்ட பலரும் இருந்தனர்.
2024 மக்களவை தேர்தலையொட்டி முதல்வர் ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, மார்ச் 31ஆம் தேதி ஈரோடு வருகை தரும் முதல்வர் ஸ்டாலின்; திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து சின்னியம்பாளையத்தில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைமலைநகர் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வழிகாட்டி பலகை கீழே விழும் நிலையில் அபாயகரமாக காட்சியளித்தது. இதனால் விபத்து ஏற்படும் அபாய நிலை உருவாகியது. இந்நிலையில், இதனை கண்ட போக்குவரத்து காவலர் மணிகண்டன் உடனடியாக வழிகாட்டி பலகையை சரி செய்தார்.
அவருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு விடுபட இந்தியா கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். நமக்கு சர்வாதிகாரம் தேவையில்லை என்றும் ஜனநாயகம்தான் தேவை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
மறைந்த எம்.ஆர்.ராதாவின் பேரனும், திரைப்பட நடிகருமான எம்.ஆர்.ஆர். வாசு விக்ரம் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் திமுகவில் இணைந்தார். இவரது சொந்த அத்தையுமான விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு எதிராக விருதுநகரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஏப்ரல் 3ம் தேதிக்கு பின் இவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இந்தியா கூட்டணி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ அவர்களை ஆதரித்து திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள தென்னூர் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் அமைச்சர் நேரு இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் இந்தியா கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
தென்காசி, வாசுதேவநல்லூரில் ஐடி நிறுவனம் போல் செயல்பட்ட ஆன்லைன் லாட்டரி நிறுவனத்தை போலீசார் இன்று சீல் வைத்தனர். ஆன்லைன் லாட்டரி நிறுவனர், மற்றும் பணியாளர்கள் 10 பேரை வாசுதேவநல்லூர் போலீசார் கைப்பற்றினர். 10க்கும் மேற்பட்ட லேப்டாப் மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக சார்பில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் மரு.கே.பி ராமலிங்கம் போட்டியிடுகிறார்.இதனிடையே தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டம் சேந்தமங்கலம் ஒன்றியத்தில் இன்று நடைபெற்றது.கூட்டத்தில் வேட்பாளர் ராமலிங்கம் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் கூட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி ஐஜேகே மூத்த நிர்வாகி முத்துராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை நீதிமன்றத்தில் எழுத்தராக பணியாற்றி வரும் லீலாவதி பணிகளை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பிய போது மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி தாக்கிவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர். இதனிடையே மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரியின் அடிப்படையில் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்: மேலப்புலியூர் கலைசெல்வன்,
ஆதனூர் ஜுவா , மங்கலமேடு அம்பிகா, புது அம்மாபாளையம் ரம்யா ஆகிய மாற்றுத்திறனாளி வீரர்கள் 2024 மார்ச்-30 அன்று நடைபெற உள்ள தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்க மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் செல்லவுள்ளனர். இதில் வீரர்கள் மேலப்புலியூர் கலைச்செல்வன் மற்றும் ஆதனூர் ஜீவா பெரம்பலூர் முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன் உட்பட பலரிடம் வாழ்த்துகள் பெற்றனர்.
Sorry, no posts matched your criteria.