India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை மாவட்டத்தில் இன்று (07.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு காவல்துறை சார்பில், காவலர்கள் மற்றும் ஐ.ஆர்.பி.என். காவலர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சிறப்புநிலை பதவிகள் வழங்கும் விழா, இன்று (07.01.2026) கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காவலர்களுக்கு பதவி உயர்வு பட்டயங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் மேல்களவாய் ஊராட்சியில் வராகநதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வருகின்றது. ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (ஜன.07) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரி, உதவி செயற்பொறியாளர் அய்யப்பன் உட்பட பலர் உள்ளனர்.

விழுப்புரம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடற்கரையோர மாவட்டங்களில் வரும் 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானியை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே விவசாயிகள் நெல் உள்ளிட்ட பயிர்களின் அறுவடை பணிகளை மழை முன்னறிவுப்பு ஏற்ப செயல்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் காவல்துறை சார்பில் இன்று(ஜன.7) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் தங்கள் பெயரில் உள்ள வங்கி கணக்குகளில் சுய தொழில் செய்ய கடன் வாங்கி தருவதாக கூறி ATM கார்டு, கையொப்பமிட்ட செக்புக்கை வாங்கிக் கொண்டு செல்லும் மர்ம நபர்களை நம்ப வேண்டாம் எனவும் இவர்கள் தங்களின் வங்கி கணக்குகளை பயன்படுத்தி சைபர் குற்றத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விடுதல் இன்றி பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பணம் வழங்கப்படும். எனவே எவ்வித சிரமமும் இன்றி தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள நியாய விலை கடையில் பொதுமக்கள் நேரடியாக சென்று தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பணத்தை நாளை முதல் பெற்றுக் கொள்ளுமாறு ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவுறுத்தியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் போதை பொருள் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் அறிவிப்பு இன்று (ஜனவரி 07) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் (ஜன.12) பாச்சலில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் காலை 8:00 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை ஏலம் நடைபெறுவதாக பொதுமக்களுக்கு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற தகுதி வாய்ந்த 4,45,659 அரசு பெரும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 74 இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 8-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை தெரு வாரியாக சுழற்சி முறையில் விநியோகம் மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் பிரசாந்த் இன்று (ஜன.7) தெரிவித்துள்ளார்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் StartupTN சார்பில் TANSEED 8.0 பிச்ச் மேம்பாட்டு பணிமனை ஜனவரி 9, 2026 அன்று காலை 10 மணிக்கு ஓசூர் StartupTN பிராந்திய மையத்தில் நடைபெறுகிறது. தொடக்கநிலை நிறுவனர்களுக்கான இந்நிகழ்வில் பிச்ச் ஸ்டோரி, டெக் வடிவமைப்பு, நிதி விளக்கம் மற்றும் தாக்கம் வெளிப்படுத்தல் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பதிவு அவசியம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (ஜன.07) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.