Tamilnadu

News January 7, 2026

ராணிப்பேட்டை:நேரலையில் கலந்து கொண்ட கலைஞர்கள்

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற கைவினைத் தொழில் முனைவோர் வெற்றி விழாவின் நேரலை, ராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரகலா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜன.07) ஒளிபரப்பப்பட்டது. இதில் கலைஞர் கைவினைத் திட்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திட்டப் பயன்களை அறிந்து கொண்டனர்.

News January 7, 2026

கிருஷ்ணகிரியில் ஜனவரி 9ல் திருக்குறள் தேர்வு

image

திருக்குறள் வார விழா 2026 ஜனவரி 9ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வு கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். இந்நிகழ்வில் 50 கேள்விகள் இடம்பெறும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.1.50 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1.20 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.90 ஆயிரம் வழங்கப்படும். 3 அணிகளுக்கு ஊக்கப் பரிசாக ரூ.15 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

News January 7, 2026

திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அவசர உதவி, பாதுகாப்பு, குற்றநிகழ்வுகள் தடுப்பு மற்றும் ரோந்து சம்பந்தமான தகவல்களை பெற இந்த விவரங்களை பயன்படுத்தலாம். இது மக்கள் பாதுகாப்பையும், போலீஸ் சேவையை மேம்படுத்தும் முயற்சியாகும்.

News January 7, 2026

100 நாள் பணியாளர்களை நேரில் சந்திக்கும் எம்பி

image

ஊரக மக்களின் வாழ்வாதாரத்தையும் உரிமையையும் கேள்விக்குள்ளாக்கும் நூறு நாள் வேலைத் திட்டத்தின் புதிதாக கொண்டு வரப்பட்ட திட்டத்தில் மசோதாவுக்கு எதிராக திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் மக்களை நாளை சந்திக்க உள்ளார். குருவாயல், தாமரைபாக்கம், சேதுபாட்டு உள்ளிட்ட 5 கிராமங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் மக்களை நாளை சந்திக்க உள்ளார்.

News January 7, 2026

மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

image

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு  வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர் சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, புதிய வாக்காளர் விண்ணப்பிக்க மற்றும் வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளி என பதிவு செய்ய சிறப்பு முகாம் 10.01.2026 அன்று   நடைபெறவுள்ளது. முகாமில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயன்படலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News January 7, 2026

சென்னை: 12 காவல் ஆய்வாளர்கள் அதிரடி மாற்றம்!

image

சென்னையில் 12 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து இன்று (ஜன. 7) சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். விமல் மாம்பலம் காவல் நிலைத்தில் இருந்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்துக்கும், விஜயகாந்த் மெரினா கடற்கரையில் இருந்து மாம்பலம் காவல் நிலையத்துக்கும், ராஜ் பிரபு மெரினா காவல் நிலையத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 7, 2026

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைய கீழ்க்கண்ட தகுதியுள்ள சிறப்புப் பிரிவைச் சார்ந்த (SC/ST) பயனாளிகள் அருகில் உள்ள இ- சேவை மையங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு சமூகநல அலுவலக 04575-240426 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்

News January 7, 2026

இரவு காவல் பணி அதிகாரிகள் பட்டியல் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் இன்று இரவு முதல் நாளை ஜனவரி 8ஆம் தேதி காலை ஆறு மணி வரை சிறப்பு காவல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் பட்டியல் மாநகர காவல் துறை செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் கைபேசி எண்கள் விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன அவசர காவல் உதவி தேவைக்கு சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

News January 7, 2026

புதுகை: செல்வம் செழிக்க இங்கு செல்லுங்கள்!

image

புதுக்கோட்டை, திருமயம் பகுதியில் அமைந்துள்ள சத்திய மூர்த்தி பெருமாள் கோயில், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. இங்கு மூலவராக அருள்பாலித்து வரும் சத்திய மூர்த்தி பெருமாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், நீண்டகாலமாக இருக்கும் கடன் தொல்லைகள் நீங்கி வாழ்வில் செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம். கடன் தொல்லையால் அவதிப்படும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க

News January 7, 2026

திருவாரூர்: தீரா நோய்களை தீர்க்கும் கோயில்

image

வலங்கைமான் வட்டம், நரிக்குடியில் எமனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில் எமதர்ம ராஜாவுக்கென அமைந்துள்ள சில கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயிலில் அமைந்துள்ள ஊற்றில் சுரக்கும் நீரைப் பருகினால் தீராத நோய்களும் உடனடியாக குணமாகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் பிதுர்தோஷம் நீங்க, துர்மரணம் ஏற்படாமல் இருக்கவும் பக்தர்கள் இத்தலத்தில் உள்ள எமனை தரிசிக்கின்றனர். SHARE NOW

error: Content is protected !!