India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரத்தை சேர்ந்த சுவிங்லின் என்பவர் காரைக்காலில் உள்ள வங்கி ஏ.டி.எம் மையங்களுக்கு சென்று ஏ.டி.எம் பின் செட் பண்ண தெரியாதவர்களிடம் உதவி செய்வது போல் நாடகமாடி அவர்களின் ஏ.டி.எம் கார்டை மறைத்து வைத்துக்கொண்டு பழைய ஏ.டி.எம் கார்டை கொடுத்து ஏமாற்றி பணம் மோசடி செய்துள்ளார். இதனை அடுத்து காரைக்கால் நகர காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த ஏ.டி.எம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
மதுரை வடக்கு சித்திரை வீதியை சேர்ந்தவர் நாராயணன்(30). இவர் நேற்று முன்தினம் இரவு புரோட்டா சாப்பிட்டு விட்டு வழக்கம் போல் தூங்கிய நிலையில் நேற்று காலை உயிரிழந்து கிடந்துள்ளார். இதைக் கண்ட அவரது மனைவி விமலா தேவி தன் கணவர் இறப்பில் சந்தேகம் உள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து நாராயணன் உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெரம்பலூரைச் சேர்ந்தவர் அன்மோல் ஜீனோஜா, தனியார் பள்ளி ஆசிரியர். இவர் நேற்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் லாரி ஒன்று இவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், லாரி அருகில் இருந்த ஷேர் ஆட்டோவில் மோதி நின்றது. தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள தென்னமாதேவி உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மார்ச் 23ஆம் தேதி அறிவித்தது. அதன்படி இந்த கட்டண உயர்வு இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கட்டண உயர்வு முடிவைத் திரும்பப் பெற்றது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கணியம்பாடி (வல்லம்) உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மார்ச் 23ஆம் தேதி அறிவித்தது. அதன்படி இந்த கட்டண உயர்வு இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கட்டண உயர்வு முடிவைத் திரும்பப் பெற்றது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட பயிற்சி முகாம் ஏப்.1-ஆம் தேதி முதல் 12 வரை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் ஆதாா் அட்டை நகலுடன் மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலரை (7401703504) தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வேட்பாளராக போட்டியிடுகிறார். குமரி மாவட்டம் முழுவதும் பாஜகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் நாகர்கோவில் வடசேரி பகுதியில் நேற்று இரவு வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் ஈடுபட்டார். மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று காலை 9 மணி அளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனித்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆதரித்து திறந்தவெளி வேன் மூலம் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்த தகவலை கட்சி தலைமை அறிவித்துள்ளது.
தேவூர் அருகே ஆலத்தூர், ரெட்டிபாளையம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் ஆடு, கோழிகளை வெறி நாய் கடித்து வருகிறது. நேற்று காலை ரெட்டிபாளையம் காக்காயன்காடு பகுதியை சேர்ந்த விவசாயி பெருமாள் என்பவருக்கு சொந்தமான 5 செம்மறி ஆடுகளை வெறி நாய் கடித்து குதறியது. இதில் 5 ஆடுகளும் பலியானது . இதனால் கால்நடைகளை கடித்து வரும் வெறிநாய்களை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் பக்தர்கள் வருகை தந்திருந்தனர். தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்து வந்த பலரும் மாதாவை தரிசனம் செய்துவிட்டு பின்னர் பொழுதைக் கழிக்க ஒரே நேரத்தில் கடற்கரையில் குவிந்தனர். இதனால் நேற்று காலை முதல் இரவு வரை மக்கள் வெள்ளத்தால் கடற்கரை நிரம்பி வழிந்தது.
Sorry, no posts matched your criteria.