Tamilnadu

News March 31, 2024

நெல்லைக்கு நாளை வருகை தரும் கனிமொழி

image

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு பிரச்சாரம் மேற்கொள்வதற்காக திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி நாளை (ஏப்.1) நெல்லைக்கு வருகை தர உள்ளார். அதன்படி நாளை (ஏப்.1) ராதாபுரம் பகுதியிலும் நாளை மறுதினம் (ஏப்.2) டவுன் பகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

News March 31, 2024

வேலூர் மார்க்கெட்டில் மீன்களின் விலை உயர்வு

image

வேலூர் மீன் மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமையான இன்று (மார்ச்.31) மீன்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மேலும் கடந்த வாரத்தை விட மீன்களின் விலையும் உயர்ந்தது. பெரிய வஞ்சரம் மீன் ரூ.1400, சிறிய வஞ்சரம் மீன் ரூ.800, இறால் ரூ.500 முதல் 450, கட்லா ரூ.160, நண்டு ரூ.400 முதல் 450, மத்தி ரூ.140 முதல் 160 என மீன்கள் விற்பனை செய்யப்பட்டது.

News March 31, 2024

திருப்பூர்: பாலியல் தொழில்.. 2 பேர் கைது

image

திருப்பூர் வளர்மதி பஸ் நிறுத்தம் அருகே உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்த 2 பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து மசாஜ் சென்டர் உரிமையாளர் கார்த்திக் மற்றும் ஊழியர் கார்த்திகேயன் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

News March 31, 2024

மயிலாடுதுறையில் 31 லட்சம் வரை பணம் பறிமுதல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக எடுத்துச்செல்லப்பட்ட ரூ.31 லட்சத்து 74 ஆயிரத்து 145 இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான மகாபாரதி இன்று(மார்ச்.31) தெரிவித்துள்ளார். மேலும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

News March 31, 2024

விருதுநகர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை!

image

ஏழாயிரம்பண்ணை பகுதியை சேர்ந்த அஜித்குமார் 25, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.சிறுமியை திருமணம் செய்வது கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.பின்னர், சிறுமியை சாதியை காரணம் காட்டி செய்துகொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார்.சிறுமி அளித்த புகாரின் பேரில் இளைஞர் மீது இன்று போக்ஸோ வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 31, 2024

கடலூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுப்பு

image

வரும் ஏப்ரல் 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் பாராளுமன்ற மக்களவை தேர்தல் திருவிழா தங்கள் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடியில் நடைபெறுகிறது. இவ்விழாவில் தங்கள் வருகை தந்து தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்து நமது மாவட்டத்தில் 100% வாக்குபதிவு நடத்தி தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டுமென கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

News March 31, 2024

சென்னையை சேர்ந்தவர் மலையேறும் போது உயிர் இழப்பு

image

கோவை வெள்ளியங்கிரிமலைக்கு சென்னையை சேர்ந்த ரகுராமன் 5ஆவது மலையில் உள்ள சீதை வனம் பகுதியில் நேற்று உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் 3 பேர் உட்பட ஒன்றரை மாதத்தில் மட்டும் மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் 6 பேர் மரணமடைந்துள்ளனர். வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் உடல் முறையாகபரிசோதனை செய்யவும். உடலில் சிறு பிரச்னைகள் இருந்தாலும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 31, 2024

புதுகை: வியாபாரிக்கு கத்திக்குத்து.. 2 பேர் கைது! 

image

புதுகை அருகே சிதம்பரவிடுதி சேர்ந்தவர் கண்ணன் காய்கறி வியாபாரி. இவர் மோட்டார் சைக்கிளில் வந்தபோது, மர்ம நபர்கள் இருவர் முன் விரோதத்தில் வேறு ஒருவரை கத்தியால் குத்துவதற்கு பதிலாக அவ்வழியாக இருட்டில் வந்த கண்ணனை கத்தியால் குத்தியதில் அவர், படுகாயம் அடைந்தார். இதனையடுத்து போலீசார் கத்தியால் குத்திய ரமணன், மற்றும் ராஜீவ் ஆகிய இருவரையம் நேற்று போலீசார் கைது செய்தனர்.

News March 31, 2024

வடசென்னை தென் சென்னைக்கு 3 வாக்குப்பதிவு இயந்திரம்

image

தென் சென்னை தொகுதியில் 41 பேர் போட்டியிடுவதால் 3 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது இதே போல் வடசென்னையில் 35 பேர் போட்டியில் உள்ளதால் 3 மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட உள்ளது. மத்திய சென்னையில் 31 பேர் போட்டியிடுவதால் இங்கு 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நோட்டாவுடன் சேர்த்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 10 பொத்தான்கள் பயன்பாட்டில் இருக்கும். 

News March 31, 2024

ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்களவை தேர்தல் தொடர்பாக வேட்பாளர்கள், முகவர், அரசியல் கட்சியினருடனான தேர்தல் நன்னடத்தை விதி மற்றும் செலவினங்கள் தொடர்பான விளக்கக் கூட்டம் தேர்தல் அலுவலர்ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இதில், தேர்தல் பொது பார்வையாளர் போர் சிங் யாதவ் முன்னிலை வகித்தார்.

error: Content is protected !!