Tamilnadu

News April 2, 2024

திண்டுக்கல்: 31 பேர் கைது: தட்டி தூக்கிய போலீஸ்

image

திண்டுக்கல் மதுவிலக்கு டி.எஸ்.பி. சுந்தரபாண்டியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் திண்டுக்கல், நிலக்கோட்டை, நத்தம், வடமதுரை வேடசந்தூர், பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்னர். அப்போது மதுவிற்ற மாணிக்கம், வனராஜா,  முத்துக்குமார், நாகராஜ், ஜோசப் ராஜ், உள்ளிட்ட 31 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 485 மதுபாட்டில்களை  பறிமுதல் செய்தனர்

News April 2, 2024

சேலம்: CSK கோடை கால கிரிக்கெட் பயிற்சி

image

சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK) நடத்தும் சூப்பர் கிங்ஸ் அகாடமியில், ஏப்.6ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை கோடைக்கால கிரிக்கெட் பயிற்சி சேலம் நீலாம்பாள் சுப்ரமணியம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. 6 முதல் 23 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். மாணவ சேர்க்கைக்கு 73054 22282 தொடர்பு கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு www.superkingsacademy.com என்ற இணையதளத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 2, 2024

அதிமுக வேட்பாளர் ஒரு பலி ஆடு 

image

வேலூர் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணி கட்சியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆம்பூரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் அதிமுகவிற்கு நான் ஒருமுறை பலி ஆடாக இருந்தேன் தற்போது பாவம் மருத்துவர் பசுபதி பலி ஆடாக கிடைத்து இருக்கிறார் என சாடினார். 

News April 2, 2024

குளிர்பான விற்பனையாளர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் கோடைகாலம் துவங்கியுள்ளதால் பொதுமக்கள் சாலையோரம் விற்கப்படும் பழச்சாறுகள் மற்றும் குளிர்பானங்களை அருந்தி வருகின்றனர். இவ்வாறு விற்கப்படும் குளிர்பானங்கள் தரமானதாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என விற்பனையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதுகுறித்த புகார்களுக்கு 94440 42322 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 2, 2024

நீலகிரி: ரயில் நிலையத்தில் தடை

image

நீலகிரி மலை ரயிலில் வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் விரும்பி பயணிக்கிறார்கள். அப்படி வருபவர்கள் ரயில் முன் நின்று, போட்டோ எடுப்பது வழக்கம். ஆனால் இன்று காலை குன்னூர் ரயில் நிலையத்தில் புகைப்படம் எடுக்க தடை விதித்து விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் இந்த அறிவிப்பு, பயணிகளை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

News April 2, 2024

புதுவை: சிறுமி கொலை வழக்கு சிபிஐக்கு மாற்ற வேண்டும்

image

புதுச்சேரியில் முத்தியால்பேட்டை பகுதியில் ஆர்த்தி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழங்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வழக்கில் காவல்துறை முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என சிறுமியின் பெற்றோர் இன்று டிஜிபி அலுவலகத்தில் டிஜிபியிடம் மனு அளித்தனர்.

News April 2, 2024

கோவையில் கத்திரி வெயில் ஆரம்பம்

image

கொங்கு மண்டல பகுதிகளில் வரும் 20 நாட்களுக்கு, 37 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கக்கூடும் என்றும், கோவையில் 37-39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும். இதனால் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்த்து, பழங்கள் மற்றும் தேவையான நீர் உட்கொள்ள வேண்டும் என்று கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் இன்று தெரிவித்துள்ளார்.

News April 2, 2024

தென்காசி மாவட்டத்தில் அடுத்த 3 நேரத்திற்கு..!

image

நடப்பாண்டில் கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிவகங்கை, ஆலங்குளம், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

News April 2, 2024

வாக்களிக்க துண்டு பிரசுரம் ஒட்டிய கலெக்டர்

image

வருகிற பொது தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் துண்டு பிரசுரங்களை நீலகிரி கலெக்டர் அருணா இன்று உதகை சேரிங்கிராஸ் பகுதியில் வினியோகித்தார் . பேருந்தில் ஏறி பயணிகளுக்கும் கொடுத்தார். அவ்வழியாக வந்த கேஸ் சிலிண்டர் வாகனத்தை நிறுத்தி சிலிண்டர்களில் பிரசுரங்களை ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

News April 2, 2024

சிவகங்கையில் மழைக்கு வாய்ப்பு

image

நடப்பாண்டில் கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மானாமதுரை, காரைக்குடி, காளையார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது

error: Content is protected !!