India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கலில் 174 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி ராசிபுரம்- 19, சேந்தமங்கலம்- 29, நாமக்கல்- 18, பரமத்தி வேலூா்- 26, திருச்செங்கோடு- 33, குமாரபாளையம்- 49 என்ற எண்ணிக்கையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் உமா இன்று தெரிவித்துள்ளாா். இந்த ஆய்வின்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலா் த.முத்துராமலிங்கம், ராசிபுரம் வட்டாட்சியா் சரவணன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.
ஆற்காட்டில் உள்ள துணிக்கடையில் திமிரியைச் சேர்ந்த சிவசங்கரி (20) என்ற இளம் பெண் வேலை பார்த்து வந்தார். இன்று டீ குடிப்பதற்காக துணி கடையில் இருந்து செல்லும்போது ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் சிவசங்கரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார் .ஆற்காடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர், கயர்லாபாத் காவல் உதவி ஆய்வாளர் சாமிநாதன் தலைமையிலான, போலீஸார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கல்வி என்பவர் கள்ளத்தனமாக மது விற்றது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிந்து, அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் நேற்று (01-04-24) தனது இருசக்கர வாகனத்தில் வத்திராயிருப்பு தாலுகா, வலையப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த போது, லாரி மீது மோதி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சீர்காழி அருகே கீழமூவர்கரை கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது. அதில் மீனவர்களின் அடிப்படை உரிமைகளை மீட்டுத்தர வேண்டியும், எங்கள் உரிமைகளை பெற நாங்களே பணம் கொடுக்கும் அவலத்தை எதிர்த்தும், இனியும் ஏமாறப்போவதில்லை, வாக்களிக்கப் போவதில்லை என்ற வாசகங்களுடன் அரசியல்வாதிகளுக்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் அடுத்து உச்சிமேடு ஊராட்சியை சேர்ந்தவர் லதா (55). இவர் நேற்று இரவு சென்னையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து தகவலின் பேரில் ரெட்டிசாவடி போலீசார் மோப்பநாய் உதவியுடன் நேரில் சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் முத்தியால்பேட்டை பகுதியில் ஆர்த்தி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழங்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வழக்கில் காவல்துறை முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என சிறுமியின் பெற்றோர் இன்று டிஜிபி அலுவலகத்தில் டிஜிபியிடம் மனு அளித்தனர்.
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, இன்று பிரச்சாரத்தின் இடையே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அண்ணாமலை தற்போது கச்சத்தீவு சம்பந்தமாக ஆர்டிஐ தகவல் உள்ளது எனக் கூறுகிறார். இதற்கு ஆர்டிஐ தகவல் தேவையா என்ற அவர், மோடியிடம் கூறி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியது தானே என்றார். அழகிரியை எதிர்த்தே அரசியல் செய்தவன் நான், அண்ணாமலை எல்லாம் எம்மாத்திரம் என்று ஆவேசமாக பேசினார்.
சேத்துப்பட்டு அடுத்த இந்திரவனம் கிராம வழியாக ராணிப்பேட்டை பகுதியில் இருந்து மேல்மலையனூர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பக்தர்களின் வேன் டயர் வெடித்து கவிழ்ந்ததில் 15 பேர் படுகாயமடைந்தனர். இது தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சேத்துப்பட்டு போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெப்ப அலைகள் வீசி வந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் இன்று திடீரென சேலம் மாநகரில் மிதமான முதல் பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக அப்பகுதியில் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.