Tamilnadu

News April 1, 2024

திருச்சியில் 2ஆம் கட்ட குலுக்கல் பணி தொடக்கம்

image

நாடாளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் மற்றும் திருச்சி பாராளுமன்ற தேர்தல் பார்வையாளர் தினேஷ்குமார் ஆகியோர் இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், 2ம் கட்டமாக வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்புவதற்காக குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணியை தொடங்கி வைத்தனர்.

News April 1, 2024

தரங்கம்பாடி அருகே அதிமுகவில் இணைந்த நிர்வாகிகள்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பூதனூரில் உள்ள அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பவுன்ராஜ் இல்லத்தில், தரங்கம்பாடி பேரூராட்சி பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இன்று அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு அதிமுக சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

News April 1, 2024

கடலூர் அருகே மருத்துவ பரிசோதனை

image

கடலூரில் கடந்த இரண்டு நாட்களாக முதுநகர் வஸந்தராயன் பாளையம் பகுதியில் இருந்த குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அந்த பகுதி மக்கள் பாதிப்பு அடைந்தனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு சுவாச பிரச்சனை, கண் எரிச்சல் போன்று வேறு ஏதேனும் உடல் உபாதைகள் உள்ளனவா என மருத்துவ குழு பரிசோதனை செய்தனர்.

News April 1, 2024

பூத் ஸ்லிப் வழங்குவதை ஆய்வு செய்த தேர்தல் அலுவலர்

image

இராமநாதபுரம் நகராட்சி பகுதியில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் ஸ்லிப் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வாக்காளர்கள் யாரும் விடுபடாமல் அனைவரது வீட்டிலும் பூத் ஸ்லிப் ஊழியர்கள் வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

News April 1, 2024

பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவன்  தற்கொலை

image

மேலூர் திருவாதவூரை சேர்ந்தவர் வெங்கடேசன், மகன் ஹரிஷ் பாண்டி(18). பிளஸ் டூ மாணவரான இவர் தேர்வு எழுதிய நாளில் இருந்து தேர்வு முடிவை எண்ணி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு ஒரு மணி அளவில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரிக்கின்றனர்.

News April 1, 2024

வாக்காளர் தகவல் சீட்டினை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று முதல் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடங்கியிருக்கிறது. அதன்படி திருவாரூர் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் தேர்தல் அலுவலர் சாரு ஸ்ரீ  பவித்திரமாணிக்கம் ஊராட்சியில் வீடு வீடாக சென்று வாக்காளர் தகவல் சீட்டினை பொதுமக்களிடம் வழங்கினார். இந்நிகழ்வில் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா உட்பட பலர் இருந்தனர்.

News April 1, 2024

தஞ்சை பயனியர்களுக்கான செய்தி

image

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கும் வகையில் ஓய்வறைகள் ஏற்கெனவே தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து பராமரிப்பு ஐஆர்சிடிசி நிர்வாகத்திடம் தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்படைத்தது. அதன்படி நேற்று 10 குளிரூட்டப்பட்ட அறைகள் புனரமைக்கப்பட்டு, அதனை பயன்பாட்டுக்கு திருச்சி ரயில்வே கோட்ட மேலாளார் அன்பழகன் திறந்து வைத்தார்.

News April 1, 2024

சேலம்: மதுபானங்களை விற்கக் கூடாது!

image

சேலம் மண்டல டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இடத்தை பொறுத்து ரூ.1 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை விற்பனை நடக்கிறது. தேர்தல் காரணமாக வழக்கத்தை விட 30 % கூடுதலாக விற்பனையாகி வரும் நிலையில், ஒரு தனி நபருக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் மதுபானங்களை விற்கக் கூடாது என இன்று(ஏப்.1) சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அறிவுறுத்தி உள்ளனர்.

News April 1, 2024

ராணிப்பேட்டை: 200 சவரன் நகை கொள்ளை

image

ஆற்காடு அடுத்த தென் நந்தியாலம் எஸ்பி நகரை சேர்ந்த போக்குவரத்து துறை ஓய்வு பெற்ற உதவி பொறியாளர் சிட்டிபாபு வீட்டில் கடந்த 28ம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகை, ரூ.2 லட்சம், 2 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டது. ரத்தினகிரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன் (24) என்பவரை நேற்று கைது செய்தனர்.

News April 1, 2024

குமாரியில் கடல் சீற்றம்!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடல் பகுதிகளிலும் நேற்று மாலை திடீரென கடல் அலைகள் சீற்றமாக காணப்பட்டன. சுனாமி காலத்தில் ஏற்பட்டது போன்று அலையின் வேகம் இருந்தது. இதனால் கடலோரப் பகுதிகளில் ஒருவித பரபரப்பு ஏற்பட்டது.இதனால் வீடுகளில் இருந்த மக்கள் அச்சத்தில் சாலைக்கு வந்தனர். அங்கிருந்து அவரச அவசரமாக பாதுகாப்பான இடங்களை தேடிச் சென்றனர்.

error: Content is protected !!