Tamilnadu

News January 8, 2026

புதுவை: விடுமுறையில் பள்ளிகளை இயக்க அறிவிப்பு

image

புதுச்சேரியில் டிட்வா புயல் காரணமாக கடந்த நவம்பர் 29-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய புதுவையில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு வரும் 10-ம் தேதி பள்ளிகள் இயங்கும் என கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அன்றைய தினம் வெள்ளிக்கிழமை பாடத் திட்டத்தின்படி வகுப்புகள் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

News January 8, 2026

நாகை: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல் தொடக்கம்

image

நாகை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன், நாகை எம்எல்ஏ ஷாநவாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன்படி மாவட்டத்தில் 2,19,309 குடும்ப அட்டை பயனாளிகளுக்கு தலா ரூ.3000 ரொக்கம், அரிசி, சீனி, கரும்பு, வேஷ்டி–சேலை அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக நாகை சிஎஸ்ஐ பள்ளி நியாயவிலைக் கடையில் 711 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

News January 8, 2026

நாகை: 2 நாட்களுக்கு மழை வெளுக்கும்!

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் ஜன.9 (வெள்ளி), ஜன.10 (சனி) ஆகிய 2 தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News January 8, 2026

நாமக்கல்: போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

நாமக்கல் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு<> இங்கு கிளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 8, 2026

திண்டுக்கல்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும்இலவச சிகிச்சை பெறலாம்

1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்

2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்

3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News January 8, 2026

ராணிப்பேட்டையில் திருக்குறள் வார விழா தேர்வு அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் திருக்குறள் வார விழா–2026 முன்னிட்டு, திருப்பூரில் நடைபெறவுள்ள குறளாசிரியர் மாநாடு மற்றும் மாநில அளவிலான வினாடி–வினா போட்டிக்கான மாவட்ட அளவிலான முதல்நிலைத் தேர்வு நாளை (ஜன.9) மதியம் 2 முதல் 3 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்கலாம்.

News January 8, 2026

புயல் சின்னம்: கடலூருக்கு கனமழை எச்சரிக்கை

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் ஜன.10 மற்றும் ஜன.11 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News January 8, 2026

விருதுநகரில் பரபரப்பு….. எரிந்த நிலையில் உடல் மீட்பு

image

விருதுநகர் ஆத்துப் பாலம் அருகே நிறைவாழ்வு நகர் சர்ச் எதிரே நீர்வரத்து ஓடையில் நேற்று இரவு 7:00 மணிக்கு அடையாளம் தெரியாத ஆண் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. பஜார் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படும் போலீசார் அவரது பெயர், விபரம் குறித்து விசாரிக்கின்றனர்.

News January 8, 2026

வேலூர் பெண்களே இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

image

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை- 181, ராகிங்-155222, பெண்கள் & குழந்தைகள் மிஸ்ஸிங்- 1094, குழந்தைகள் பாதுகாப்பு- 1098, மனஉளைச்சல்- 9911599100, தேசிய பெண்கள் ஆணையம்- 01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்- 044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்

News January 8, 2026

ராணிப்பேட்டை பெண்களே இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

image

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை- 181, ராகிங்-155222, பெண்கள் & குழந்தைகள் மிஸ்ஸிங்- 1094, குழந்தைகள் பாதுகாப்பு- 1098, மனஉளைச்சல்- 9911599100, தேசிய பெண்கள் ஆணையம்- 01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்- 044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்

error: Content is protected !!