India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் வேலூர், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை (ஏப்ரல் 2) வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சங்கீதா விடுத்துள்ள அறிவிப்பில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பாராளுமன்ற தேர்தல் நடக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்காளர்கள் 12 வகையான ஆவணங்களை பயன்படுத்தி வாக்கினை செலுத்தலாம் என அறிவித்துள்ளார். அதன்படி ஆதார் அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட 12 வகையான அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்கலாம் என அறிவித்துள்ளார்.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தேர்தல் பணி மேற்கொள்வது மற்றும் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிகள் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் எம் ஆனந்தன் கலந்து கொண்டார்.
நெல்லை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸுக்கு கை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று (ஏப்ரல் 2) பாளை முஸ்லிம் அனாதை நிலையத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு வருகை தந்தார். அங்கு இஸ்லாமியர்களோடு சிறிது நேரம் கலந்துரையாடினார். தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
பெற ஒத்துழைக்கும் படி கேட்டுக் கொண்டார்.
சேலம் மாவட்டம், நெத்திமேடு ஜங்ஷன் பகுதியில் (01.04.2024) நேற்று மாலை பறக்கும் படை அதிகாரியான தலைவாசல் வேளாண் துறை உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்தவரை நிறுத்தி சோதனை நடத்தினர். அவர் கொண்டு வந்த 7 கிலோ எடை கொண்ட வெள்ளி கொலுசுக்கு தேவையான முத்து மற்றும் கொக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பத்தூர் அருகே பசுமை நகர் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து ஸ்கேன் செண்டர் நடத்தி அதில் கர்ப்பிணி பெண்களுக்கு சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என பரிசோதித்து வந்தது அம்பலமானது. அங்கு சென்ற போலீசார் ஸ்கேன் செண்டரில் பணியாற்றிய ஐயப்பனை கைது செய்து இடைத்தரகர் மற்றும் உரிமையாளரை வலை வீசி தேடி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் மதினா நகர் அருகே, ஊட்டியை சேர்ந்த சதீஷ்குமார், இளங்கோவன் உள்ளிட்டோர் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதில் சதீஷ்குமார் மது பாட்டிலை உடைத்து அப்பகுதியில் வீசியுள்ளார். இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த ஆகாஷ், அசாருதீன், அன்வாஸ் முகைதீன், அபிபூர் ரகுமான் உள்ளிட்ட 6 பேர் தட்டி கேட்ட போது தகராறு ஏற்பட்டு இருவரையும் தாக்கியுள்ளனர். இப்புகாரின் பேரில் போலீசார் 6 பேரையும் நேற்று கைது செய்தனர்.
திருமங்கலம் அருகே செங்குளத்தில் வசிக்கும் ரௌடி முத்தையா, சோழவந்தான் அருகே மேலக்காலில் நிகழ்ச்சிக்கு சென்றபோது, விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த சித்தார்த் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், நேற்று முன்தினம் நள்ளிரவில் முத்தையா தனது நண்பர்களுடன், சித்தார்த்தை சந்திக்க சென்ற போது, மீண்டும் மோதல் ஏற்பட்டு முத்தையா குத்தி கொலை செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நேற்று நடந்த 10ம் வகுப்பு கணிதத்தேர்வு மதுரை மாவட்டத்தில் 145 மையங்களில் நடைபெற்றது. 488 பள்ளிகளில் படிக்கும் 20 ஆயிரத்து 37 மாணவர்கள், 18 ஆயி ரத்து 317 மாணவிகள் என மொத்தம் 38 ஆயிரத்து 354 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 522 மாணவர்கள், 489 மாணவிகள் என மொத்தம் 1011 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கூடலூர், ஶ்ரீமதுரை அருகே மண்வயல் பகுதி கிராமங்களில் இன்று கூடலூர் ஒன்றிய திமுக செயலாளர் அ.லியாக்கத் அலி தலைமையில் திமுகவினர் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆ.ராசாவுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் கங்காதரன், பிரதீஸ், மற்றும் பாக முகவர்கள் தேவசியா, பிரின்ஸ், மனோஜ், ராஜ்குமார், பாபு, ஆஷா , மணி, ஜோசப், அனில் குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.