Tamilnadu

News April 2, 2024

வரதராஜா பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் – அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரமோற்சவம் மே 20ம் தேதி தொடங்கவுள்ளதாக கோயில் நிர்வாகம் இன்று(ஏப்.2) அறிவித்துள்ளது. முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவம் 22ம் தேதி காலையும், திருத்தேர் உற்சவம் 26ம் தேதியும் நடைபெறுகிறது.

News April 2, 2024

புதுக்கோட்டை அருகே விபத்து;மரணம் 

image

கும்பக்குடியை சேர்ந்தவர் அன்புராஜ் இவர் தனியார் நர்சிங் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று நர்சிங் பள்ளியில் இருந்து திருச்சி- புதுக்கோட்டை சாலையில் உள்ள கடைக்கு டீ குடிக்க சைக்கிளில் சாலையை கடக்க முயன்றபோது சேலத்தில் இருந்து காரைக்குடியை நோக்கி
சரவணன் என்பவர் ஓட்டி சென்ற சரக்கு வேன் எதிர்பாராத விதமாக அன்புராஜ் மீது மோதியது. இதில் அன்புராஜ் பலியானார்.

News April 2, 2024

வேன் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

image

கலவை தாலுகா, அல்லாளசேரி அருகே நேற்று(ஏப்.1) இரவு வேன் மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கீராம்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவர் சக்திவேல்(19) இன்று(ஏப்.2) உயிரிழந்தார். அவருடன் சென்ற சக மாணவர்கள் பிரகாஷ், ஹரிகரன் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News April 2, 2024

தென்காசியில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

image

தென்காசியில் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், தென்காசி மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் தென்காசி காவல்துறையினர் மற்றும் கேரளா மாநில காவல் துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு இன்று நடைப்பெற்றது. அணிவகுப்பானது தென்காசி புதியபேருந்து நிலையத்தில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக காட்டுபாவா பள்ளி அருகே நிறைவுபெற்றது.

News April 2, 2024

ஈரோடு அருகே விபத்து: 2 பேர் பலி

image

பவானிசாகர் அருகேயுள்ள அக்கரை தடப்பள்ளியை சேர்ந்தவர் ஆறுமுகம் (58), கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜோதிமணி (48) .கணவன் மனைவி இருவரும் கள்ளிப்பட்டி அருகே உறவினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று மொபட்டில் வீடு திருப்பிக் கொண்டிருந்தனர். டி.என்.பாளையம் தனியார் கல்லூரி அருகே கார் மோதியதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 2, 2024

கடலூரில் நீச்சல் பயிற்சி தொடங்கியது

image

கடலூர் மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் இன்று பயிற்சி வகுப்பு தொடங்கியது.இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொது மக்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.5 கட்டமாக நடைபெற உள்ள நீச்சல் பயிற்சி வகுப்பில் நேற்று தொடங்கிய முதல் கட்ட பயிற்சி வகுப்பில் சுமார் 50 பேருக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.இதில் நீச்சல் குள பயிற்சியாளர்கள்,காப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

News April 2, 2024

திருச்சி:சுட்டெரிக்கும் கோடை வெயில்

image

திருச்சியில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) வெப்ப அளவு 102.2°F ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மெய்ப்பிக்கும்விதமாக வெயில் வாட்டிவதைக்கிறது. எனவே மக்கள் பகலில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 2, 2024

நாமக்கல்:முதல்முறையாக வாக்களிப்போா் 23,500 போ்

image

ராசிபுரம் அருகே உள்ள பாச்சல் பாவை பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில், மக்களவைத் தோ்தல் – 2024-ஐ முன்னிட்டு தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியா் ச.உமா, நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறை வாக்களிக்க உள்ள இளம் வாக்காளா்கள் ஏறத்தாழ 23,500 போ் உள்ளனா். அனைவரும் தவறாமல் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.

News April 2, 2024

சிவகாசி: திடீரென உயிரிழந்த பசுக்கள்

image

சிவகாசி அருகே நடையனேரி தாழிகுளத்துபட்டியை சேர்ந்தவர் அய்யனார் 48. இவர் 6 பசு மாடுகள், 3 கன்று குட்டிகள் வைத்து விவசாயம் நடத்தி வருகின்றார். அய்யனார் தன் வீட்டின் அருகே மாடுகளுக்கு சமையல் கழிவுநீரை தேக்கி வைத்து அதனை நேற்று வழங்கியுள்ளார். அந்த நீரை குடிக்க இரண்டு பசு மாடுகள் திடீரென உயிரிழந்தது இதனால் விவசாயி அதிர்ச்சி அடைந்தார். கால்நடை துறையினர் விசாரணை.

News April 2, 2024

கம்பம் அருகே விபத்து: ஒருவர் காயம்

image

லட்சுமி நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபிரபு. கொத்தமல்லித்தழை வியாபாரம் செய்து வரும் இவர் நேற்று கூடலூர் சென்று ஒரு தோட்டத்தில் கொத்தமல்லிக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு தனது டூவீலரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கம்பம் பைபாஸ் ரோட்டில் வந்த போது  எதிரே வந்த ஜீப் மோதியது. ஜெயபிரபு தலையில் பலத்த காயமடைந்து மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!