India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், காங்கேயம், அவிநாசி, திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மொத்தம் 2540 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் பணிக்கான வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி முதல்கட்டமாக நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக நேற்று 12,728 வாக்குச்சாவடி அலுவலர்கள் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.
திருச்சி அருகே துறையூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பச்சைமலை மணலோடை பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக வந்த தகவல்படி காவல்துறையினர் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார் ?என விசாரிக்கின்றனர்.
பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இன்று (ஏப்ரல் 3) காலை 8 மணி முதல் ராதாபுரம் வட்டாரத்தில் பல்வேறு கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். நவ்வலடி கிராமத்தில் மலர்த்தூவி, ஆரத்தி எடுத்து அவருக்கு நெற்றியில் திலகமிட்டும் பெண்கள் வரவேற்பு அளித்தனர். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கல்லட்டி பகுதியில் நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா நேற்று மாலை உதய சூரியன் சின்னத்திற்கு வாகனம் மீது நின்றபடி ஓட்டு கேட்டார். தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து இருப்பதாக சுற்றுலா துறை மந்திரி ராமசந்திரன் தெரிவித்தார். நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் முபாரக் உடன் இருந்தார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக ஆதரவோடு போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திருவாடானை யூனியன் சி.கே. மங்களம், மங்களக்குடி, ஆண்டாவூரணி, வெள்ளையபுரம், ஓரியூர், பாண்டு குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திறந்தவெளி வேனில் நின்று பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது ராமநாதபுரம் தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பேன் என்றும் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் இருந்தபடி தபால் வாக்களிக்க இந்திய தேர்தல் கமிஷன் முதல் முறையாக அனுமதித்துள்ளது. அதன்படி லாஸ்பேட்டை சேர்ந்த 105 வயது மூதாட்டி அஞ்சலை வீட்டில் இருந்தபடியே வாக்களித்தார். இதற்காக அவரது வீட்டில் அட்டைகளில் மறைக்கப்பட்ட வாக்குப்பதிவு அறை அமைத்து வாக்குப்பெட்டியை அதிகாரிகள் வைத்தனர். அவர் தனது வாக்கை பதிவு செய்தார்.
விருதுநகர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவர் லோடுமேன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வி.வி.ஆர் சிலை அருகே திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், சிறிது நேரத்தில் மாடசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் ஊராட்சி தொடுவாய் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சம்மாள் செல்லையா இவரது வீட்டில் நேற்று ஏற்பட்ட திடீர் மின்கசிவினால் கூரை வீடு தீ பற்றி எரிய தொடங்கியது. தகவல் அறிந்து அங்கு சென்று தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் வீடு முற்றிலும் எரிந்து வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் தீக்கிரையானது இதனால் அப்பகுதியில் சோகம் நிலவியது.
திருச்சியில் உள்ள தி முஸ்லிம் லிட்டரரி சொஸைட்டியின் தலைவர் அகமது பிரதர்ஸ் உரிமையாளர் உமர் இக்பால்,
செயலாளர் கவிஞர் சையது ஜாபர் ஏற்பாடு செய்திருந்தால் நிர்வாகிகள் கூட்டத்தில் இன்று துரை வைகோ பங்கேற்றார். அதில் கலந்து கொண்ட துரை திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு ஆதரவு திரட்டினார்.
மக்களவை 2024 பொதுத் தேர்தலை ஒட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மரு ச.உமா பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் இதனிடையே தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நாமக்கல் மாவட்ட நகர்ப்புற ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 100% வாக்களிக்க வேண்டும் வாக்காளர் உதவி 1950 உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
Sorry, no posts matched your criteria.