India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று(ஏப்.3)வெயிலின் அளவு 27 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் 23 முதல் 36 மற்றும் 37 வரை இருந்து வந்த வெப்பநிலை தற்போது 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரிக்கு ஏப்.7 ஆம் தேதி வருகை தருகிறார். தொடர்ந்து புதுச்சேரி புதிய துறைமுக வளாகத்தில் இந்தியா கூட்டணி சாா்பில் நடைபெறும் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பேசுகிறாா். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திமுக புதுவை மாநில அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான சிவா செய்து வருகிறார்.
பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் அருகே தென்செருக்கை பகுதியில், மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் இன்று(ஏப்.3) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது துரைசாமி என்பவர் ஸ்டாலின் வாகனத்தை தடுத்து நிறுத்தி, கடந்த ஆண்டு ராமதாஸின் 85வது பிறந்த நாளை முன்னிட்டு சீர்வரிசை பொருட்களுடன் 90 ஜோடிகளுக்கு பிரமாண்ட திருமணம் செய்து வைத்ததில், தனது மகளும் பயனடைந்தார் எனக்கூறி வேட்பாளரிடம் நன்றி கூறினார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்தி நகர் தெருவே சேர்ந்த முத்துக்குமார் மனைவி ராஜலட்சுமி வீட்டில் இருக்கும் இன்வெர்ட்டர் பேட்டரிக்கு தண்ணீர் ஊற்றும் போது எதிர்பாராவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே பலியானார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
நாகை நாடாளுமன்ற தொகுதி சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜை ஆதரித்து சட்டத்துறை துறை அமைச்சர் ரகுபதி மீனவ கிராமங்களில் நேற்று வாக்கு சேகரித்தார். அக்கரைப்பேட்டை, கல்லார், உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர், “இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு இராமநாதபுரம் ராஜாவின் வாரிசு மூலம் வழக்கு தொடர்ந்து கச்சத்தீவை மீட்டு காட்டுவோம்” என உறுதியளித்தார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவை தொகுதியில் நேற்று பறக்கும் படையினரின் ஆய்வில் 13 பேரிடம் இருந்து சுமார் 1,12,17,650 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் கோவை தெற்கு தொகுதியில் ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள 11 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில், தேர்தலில் வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க முடியாத 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கோவிட் வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து வரும் நாளை (4ம் தேதி) முதல் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தொடங்கும் என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் கடந்த மார் 17-ம் தேதி முதல் நேற்று (ஏப்.2) வரை ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் ரூ.13,91,390, பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் ரூ.12,06,900, போடி சட்டமன்ற தொகுதியில் ரூ.24,59,180, கம்பம் சட்டமன்ற தொகுதியில் ரூ.5,83,000 என மாவட்ட அளவில் மொத்தம் ரூ.56,40,470 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டு அருகே வேன்பாக்கம் பகுதியில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் மலர் (39) என்கிற பெண் உடல் கருகி உயிரிழந்தார். பின்பு தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் பிரேதத்தை மீட்டே உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருவண்ணாமலையில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு பங்கு கொள்ள வந்திருக்கும் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று காலை நேரடி வீதியில் நடைபயணம் மேற்கொண்டு தெருவோர கடையில் இருந்த டீ கடையில் டீ அருந்தினார். அவருடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி நாடாளுமன்ற வேட்பாளர் சி. என். அண்ணாதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.