India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் தனியார் கல்லூரி முதல்நிலை வாக்காள மாணவர்களுக்கு 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வந்தவாசி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவா, வட்டாட்சியர் பொன்னுசாமி, தேர்தல் துணை வட்டாட்சியர் சதீஷ், பூங்குயில் சிவக்குமார், ரெட் கிராஸ் சங்கம் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை ரயிலடி தெருவில் உள்ள விஜய் பள்ளி மற்றும் கூறைநாடு பகுதியில் உள்ள தொல்காப்பியர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, அறுபத்துமூவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, செவன்த் டே நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, அழகு ஜோதி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, ராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி, பால சரஸ்வதி பள்ளி உள்ளிட்ட 7 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
கொடைக்கானல் அண்ணாநகர் பகுதியில் திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து நடிகை ரோகிணி திமுக ஆட்சிகாலத்தில் செய்து முடித்த திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிகழ்வில் காங்கிரஸ், மனித நேயமக்கள் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பொருப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறை, செம்மங்குளம் பகுதியை சேர்ந்த ஏழு பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஏப்ரல் 4ஆம் தேதி விடுமுறை என ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் பள்ளிகளில் காவல்துறை, தீயணைப்பு துறை, வனத்துறை பாதுகாப்புடன் தேர்வுகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
பழனி புஷ்பத்தூர் பாமக வேட்பாளர் திலகபாமா வாக்கு சேகரிப்பில் இன்று ஈடுபட்டார். தமிழ்நாட்டில் திமுக அரசு சரக்கு பாட்டிலுக்கு வீரன் என்று தமிழ் பெயர் வைக்கிறது. பிரதமர் மோடி திருக்குறளை உலக அரங்கில் எடுத்துக் கூறி தமிழை வளர்க்கிறார். பிரதமர் யார் என்பதே தெரியாமல் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வாக்கு சேகரிக்க வருபவர்களை நிராகரிப்பு செய்யுங்கள் என தெரிவித்தார்.
சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி இன்று பேசுகையில், சுவரில் சின்னம் வரைய அனுமதிக்கவில்லை என்றால் மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிடுவோம் என திமுகவினர் மிரட்டுவதாக பொதுமக்கள் கூறிவருகின்றனர். உரிமைத் தொகையை நிறுத்தினால் சும்மா விட மாட்டேன். திமுகவின் தில்லுமுல்லுவை அதிமுகவினர் முறியடிக்க வேண்டும் என்றார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் நவாஸ் கனிக்கு ஆதரவாக இன்று பரமக்குடி அருகே நயினார் கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட அக்கிரமேசி கிராமத்தில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் பொதுமக்களிடையே தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது எடப்பாடி குறித்து பேசுகையில் கிராம மக்களுக்கும் கருணாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு சலசலப்பு ஏற்பட்டது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. சென்னைக்கு தினமும் 1000 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. 2021-ம் ஆண்டு முதல் இந்த அளவிலேயே குடிநீர் தேவை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி 1073 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவையாக அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தற்பொழுது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சுட்டெரிக்கும் இந்த வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க நெல்லையை சேர்ந்த நபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு மேற்கூரை அமைத்து அசத்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது நெல்லையில் வைரலாகி வருகின்றது.
புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் முதல்வர் ரங்கசாமி பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், சேதராப்பட்டில் தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டு 20 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். எனவே தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என ரங்கசாமி கூறினார்.
Sorry, no posts matched your criteria.