Tamilnadu

News April 4, 2024

புதுகை: தோ்தல் புகாா்களை சி-விஜில் செயலியில் தெரிவிக்க அழைப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பான புகாா்களை இந்திய தோ்தல் ஆணையத்தின் சி-விஜில் என்ற செயலி மூலம் தெரிவிக்கலாம் என மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஐ.சா. மொ்சி ரம்யா அழைப்பு விடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகாா்களை பொதுமக்கள் தங்களின் கைப்பேசி வாயிலாக செயலி மூலம் தெரிவிக்கலாம் என கூறினார்.

News April 4, 2024

நாமக்கல்: 200 முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபட விருப்பம் தெரிவித்து 200 முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. ராஜேஷ்கண்ணன் தெரிவித்தாா். நாமக்கல்லில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 1,628 வாக்குச்சாவடிகளில் தோ்தல் பணிகளை மேற்கொள்ள கா்நாடக மாநில காவல் துறையினா், துணை ராணுவத்தினா் 190 போ் வந்துள்ளனா்.

News April 4, 2024

தேனி மக்களவை தொகுதியில் 6 ஆம் தேதி தேர்தல்

image

தேனி மக்களவை தொகுதியில் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க விண்ணப்பித்த 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏப்.06 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் விடுப்பட்ட நபர்களுக்கு இரண்டாவது முறையாக வருகின்ற ஏப்.09 அன்று வாக்குப்பதிவு செய்திட வாய்ப்பளிக்கப்படுகிறது என தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆர்.வீ. சஜீவனா அறிவித்துள்ளார்.

News April 4, 2024

நான்தான் ஓபிஎஸ்: அவங்க ‘ஒ’பிஎஸ்-கள்… சிரிப்பலை

image

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நேற்றிரவு திருவாடானை அருகே உள்ள எஸ்.பி.பட்டினத்தில் பிரச்சாரத்தில் பேசுகையில், இந்த தொகுதியில் 5 பேர் என் பெயரிலேயே போட்டியிட்டு குழப்ப பார்க்கிறார்கள். ஆனால், அவர்கள் வெறும் ‘ஒ’பிஎஸ்-கள்தான். நான் ஜெ. அடையாளம் காட்டிய ‘ஓ’பிஎஸ் (ஓ-வை குறிப்பிடுகையில் ஓ….. என நீளமாக இழுத்துச் சொன்னார்) என்றார். இது அங்கு சிரிப்பலையை ஏற்படுத்தியது.

News April 4, 2024

புதுகை: தவித்த தொழிலாளி மீட்பு.

image

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள தனியார் வேளாண் கல்லூரியில் உள்ள கிணற்றில் மின் மோட்டார் பழுதானதால் மின் மோட்டாரின் பழுதுகளை சரி செய்ய நேற்று 3ம் தேதி மாலை கிணற்றுக்குள் இறங்கிய தொழிலாளி மேலே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். இது குறித்து தகவலறிந்த வாசுதேவநல்லூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளியை பாதுகாப்பாக வெளியே மீட்டனர்.

News April 4, 2024

நாமக்கல் நகராட்சி பகுதியில் எம்எல்ஏ தேர்தல் பரப்புரை

image

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மாதேஸ்வரனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் P.ராமலிங்கம் வாக்கு சேகரித்தார். உடன் நகர்மன்றத் தலைவர் கலாநிதி, நகர திமுக செயலாளர்கள் ராணா ஆனந்த், நகர்மன்ற துணைத் தலைவர் பூபதி மற்றும் திமுக சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

News April 4, 2024

மோடி மூன்றாவது முறையாக பிரதமராவது உறுதி – ஜி.கே. வாசன்

image

பாஜக கூட்டணியில்
தூத்துக்குடி தொகுதி தமாகா வேட்பாளராக போட்டியிடும் விஜயசீலனுக்கு ஆதரவாக தமாகா தலைவர் வாசன் நாசரேத்தில் நேற்றிரவு பிரச்சாரம் மேற்கொண்டார். மோடி 3-வது முறையாக பிரதமராவது உறுதி. மோடி தலைமையில் நல்லாட்சி அமைய விஜயசீலனுக்கு சைக்கிள் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன் என பேசினார். இதில் பாஜக மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம், நகரபாஜகதலைவர் பார்த்தசாரதி கலந்து கொண்டனர்

News April 4, 2024

நாங்கள் ஓட்டு போட பணம் பெற மாட்டோம் 

image

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் ஓட்டு போட நாங்கள் பணம் பெற மாட்டோம் என்ற வாசகம் அடங்கிய பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தின் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 100%வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

News April 4, 2024

திருப்பத்தூரில் வருமானம் துறையினர் சோதனை

image

திருப்பத்தூர் பகுதியில் சுமி ஸ்டுடியோ நடத்தி வரும் நவீன் குமார் என்பவரின் வீட்டில் வருமான துறையினர் நேற்று (ஏப்.3)  நள்ளிரவு முதல் தீவிர சோதனை ஈடுபட்டு வருகின்றனர். அவர் வீட்டில் கட்டு கட்டாகபணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக வருமானம் துறையினர் தகவல் தெரிவித்தனர். இதனால் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News April 4, 2024

சிவகங்கை அதிமுக வேட்பாளர் கடும் குற்றச்சாட்டு

image

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி வார் பட்டு மேலைச்சிவபுரி, பொன்னமராவதி நகரம் உட்பட 47 இடங்களில் சிவகங்கை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார் சிவகங்கை மக்கள் தொகுதியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் உறுப்பினராக இருந்து சுமார் 35 ஆண்டுகள் தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் இடம்பெறவில்லை என்று கூறினார்

error: Content is protected !!