Tamilnadu

News March 26, 2024

ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சி வேட்பு மனு தாக்கல்

image

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு விழுப்புரத்தில் வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம், இன்று (மார்ச் 26) மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பழனியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். உடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

News March 26, 2024

கடலூர்: பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

image

கடலூர் நாடாளுமன்ற தொகுதி கடலூர் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் இன்று நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சண் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

News March 26, 2024

வேலூர் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

image

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் பூபதி (51)  குடிப்பழக்கத்துக்கு ஆளான இவர் நேற்றிரவு மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் தனது அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டுள்ளார். இன்று (மார்ச் 26) காலையும் அறையை விட்டு வெளியே வராததால் கதவை உடைத்து பார்த்தபோது, பூபதி தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 26, 2024

ஒரே கட்டடத்தில் அனைத்து கட்சிகளின் சின்னம்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கருப்பூரில் உள்ள கட்டிடம் ஒன்றில் 26.03.2024 இன்று மாலை கட்டிட உரிமையாளர் அனைத்து கட்சிகளுக்கும் சாதகமாக அதிமுக, திமுக, பாஜக என அனைத்து கட்சியின் சின்னங்களை ஒரே கட்டடத்தில் வரைந்துள்ளார். இந்நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பையும் பேசப் பொருளாகவும் ஏற்பட்டுள்ளது.

News March 26, 2024

பாஜக வேட்பாளர் அண்ணாமலை நாளை வேட்பு மனு தாக்கல்

image

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், அதிமுக சார்பில் ஐடி விங் மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரனும், திமுக சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமாரும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் நாளை (மார்ச்.27) ஆம் தேதி புதன்கிழமையன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார் என இன்று (மார்ச்.26) தகவல் வெளியாகி உள்ளது.

News March 26, 2024

கடலூரில் இன்று இரவு ரோந்துப் பணி

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் ரேவதி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் கலையரசன், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் கோவிந்தசாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் பிருந்தா மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் பாக்கியராஜ் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 26, 2024

பத்தாம் வகுப்பு பொது தேர்வை 936 பேர் எழுதவில்லை

image

தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கியது. அதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் 181 மையங்கள் அமைக்கப்பட்டு அதில் 43,270 மாணவ மாணவிகள் பொதுத்தேர்வு எழுதி இருந்த நிலையில் இன்று நடைபெற்ற தமிழ் மொழி பாடத்திற்கான தேர்வை சேலம் மாவட்டத்தில் சுமார் 936 மாணவ மாணவிகள் எழுதவில்லை என்று மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்தார்.

News March 26, 2024

செய்வினை வைத்து மனைவியை பிரித்ததால் கொலை

image

சேலம் மாவட்டம் பெரமனூர் அருகே பெண்ணை கொன்று தண்ணீர் தொட்டியில் உடலை வீசிய வழக்கில், சக்திவேல் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், செய்வினை வைத்து தன் மனைவியை பிரித்ததால் கொலை செய்ததாக சக்திவேல் காவல்துறையினரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 26, 2024

உதயநிதிக்கு எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜான்சி ராணிக்கு நெல்லை டவுனில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (மார்ச் 26) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது பிரதமருடன் இருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படங்களை காண்பித்து நான் சிரித்தால் தவறு, நீங்கள் சிரித்தால் சரியா? என கேள்வி எழுப்பினார்.

News March 26, 2024

புதுவையில் ஆட்சியர் உத்தரவின் பேரில் கொடிக்கம்பங்கள் அகற்றம்

image

புதுவையில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாவட்ட கலெக்டருமான குலோத்துங்கன் உத்தரவின் பேரில் இன்று அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் அரியாங்குப்பம் புறவழி சாலை சிக்னல் அருகே சுமார் 15 வருடங்களுக்கு மேலாக இருந்து வந்த அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்பு கொடிகள் தாங்கிய கம்பங்களை ஜேசிபி மூலமாக அகற்றினர்.

error: Content is protected !!