India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்ரீபெரும்புதூா் மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் சரவணன் இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேணுகோபால் மிதிவண்டியில் தனது ஆதரவாளர்களுடன் வந்து ஸ்ரீபெரும்புதுார் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்-27) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மைக்கேல்பட்டியைச் சேர்ந்த கலியபெருமாள், மனைவி சம்பூர்ணம்(70). இவர் சம்பவத்தன்று சாலையோரம் நடந்து சென்றபோது பின்புறம் வந்த அடையாளம் தெரியாத பைக் மோதியதில் படுகாயமடைந்தார். திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வினை மாவட்டம் முழுவதும் உள்ள 78 தேர்வு மையங்களில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி மேல்நிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகளில் பயிலும் 7688 மாணவா்கள் மற்றும் 7564 மாணவிகள் என மொத்தம் 15252 தேர்வர்கள் தேர்வெழுதினர்.
திருவொற்றியூர் பகுதி ஏழாவது வார்டில் மாமன்ற உறுப்பினர் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சரவணா நகர் மற்றும் ஆர்.எம்.வீ நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று, ஏழாவது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.கார்த்திக் அவர்கள் வடசென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ அவர்களுக்கு ஆதரவாக இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார் உடன் வட்டக் கழக செயலாளர் ரவிச்சந்திரன் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தீவர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக சார்பில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தேரடி பகுதியில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பூத் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் உத்திரமேரூர் எம்.எல்.ஏ சுந்தர் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி முள்ளக்காடு நேசமணி நகரை சேர்ந்தவர் அருள்ராஜ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சக்தி முருகன் என்பவருக்கு பணம் கடனாக கொடுத்துள்ளார். இந்த பணத்தை நேற்று அருள்ராஜ் திரும்பி கேட்ட பொழுது அவரை சக்தி முருகன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இது பற்றி முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர்
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இதுவரை 405 வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.மற்றொரு பக்கம் கூட்டணி கட்சித் தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.மயிலாடுதுறை தொகுதிக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து சுதா ராமகிருஷ்ணன் கலெக்டர் அலுவலகத்தில் இன்று(மார்ச்.27) வேட்புமனு தாக்கல் செய்தார்.
குடவாசல் ஒன்றியத்தில் உள்ள 92 நடுநிலை/தொடக்கப் பள்ளிகள் உள்ளன. பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமிக்கப்பட்டு 26 பேர் தற்காலிக ஆசிரியர்கள் மாதம் 12000 ரூபாய் மதிப்பூதியத்தில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான மதிப்பூதியம் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக குடவாசல் வட்டாரக் கல்வி அலுவலர்கள் குமரேசன் மற்றும் ஜெயலட்சுமி ஆகியோர் தெரிவித்தனர்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு மதிமுக வேட்பாளர் துரைவைகோ பேட்டி அளித்தார்: அதில், தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் கொடுக்க மறுத்தாலும், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும்போது, அவர்கள் பம்பரம் சின்னம் ஒதுக்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. பாஜகவை எதிர்க்கும் இயக்கங்களை முடக்கவே , இதுபோன்று வருமான வரித்துறை, அமலாக்கத்துறை தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு பயன்படுத்துகிறது என்றார்.
Sorry, no posts matched your criteria.