India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திண்டுக்கல் நகர், புறநகர், வேடசந்தூர், எரியோடு, ஆத்தூர், நிலக்கோட்டை பகுதி பெட்டிக்கடை, மளிகை கடைகளில் நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வில்
50kg புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர்களான கமல்சேட் (65),வாசிக் அக்ரம் (28),சரவணன் (50),பாலசிங் (40) உள்ளிட்ட 10 பேருக்கு ரூ.1000 அபராதம் விதித்து கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
தேர்தலில் விதிமீறல் தொடர்பாக மக்கள் புகார் அளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல ஏற்பாடுகளை செய்துள்ளது.அதன்படி கோவை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், சி விஜில் செயலி மூலமாகவும் புகாரினை தெரிவிக்க இயலும். அதன்படி இதுவரை 157 புகார்கள் வரப்பட்டுள்ளதாகவும்,அதற்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் மதுரை மாவட்டத்தில் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மக்களவை தொகுதியில் பதிவாகும் வாக்குகள் மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வைத்து எண்ணப்படும் நிலையில் அந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணிக்கை செய்யும் தனி தனிஅரங்குகள், தடுப்புகள் அமைக்கும் பணிகள் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.பள்ளியில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும் எனவும், ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர் குறித்த விவரங்களை EMIS Portal-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், மேலப்பாளையம் 10 ஆவது வார்டு பகுதிகளில் அதிமுக முன்னாள் கவுன்சிலர்கள் அ.வெங்கடேசன் மற்றும் மிலிட்டரி குப்பன் தலைமையில் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்து இன்று பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வியாழக்கிழமைகள்தோறும் இயக்கப்பட்டு வந்த, சென்னை – நாகர்கோவில் வந்தேபாரத் சிறப்பு ரயில் சேவை ஏப்ரல் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து காலை 5.15க்கு புறப்படும் ரயில் மதியம் 2.10க்கு நாகர்கோவில் சென்றடையும்; நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.10க்கு புறப்படும் ரயில் இரவு 11.45 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
காஞ்சிபுரம் அருகே மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தில் நேற்று(ஏப்.3) போலீசார் கைது செய்துள்ளனர். செவிலிமேடு அருகே பிரபல தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக வேலை பார்ப்பவர் காமேஷ்(42). இவர் மாணவர் ஒருவருக்கு போனில் பாலியல் ரீதியான குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளார். இது குறித்து மாணவரின் பெற்றோர் கொடுத்த புகாரில் பேரில் காஞ்சி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிவகிரியில் பழமை வாய்ந்த ஶ்ரீ பொன்காளியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும். இந்நிலையில் நேற்று பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பெண்கள் மாவிளக்கு எடுத்து பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து நள்ளிரவில் குதிரை துள்ளல் நிகழ்ச்சியும், அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. இன்று அதிகாலை 4 மணியளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப்பந்தம் ஏந்தி அம்மனை வழிபட்டனர்.
குச்சனூரைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். இவர் தனது மனைவி கலைச்செல்வியுடன் டூவீலரில் சங்கராபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். தண்ணீர் டேங்க் அருகே சென்றபோது பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த கலைச்செல்வி திடீரென கீழே விழுந்தார். தலையில் பலத்த காயங்களுடன் சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளரும் மத்திய இணையமைச்சருமான முருகன் போட்டியிடுகிறார். சில நாட்களுக்கு முன் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில், தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். இந்த கூட்டத்திற்கு உரிய அனுமதி பெறவில்லை என உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசங்கர் அளித்த புகாரின்படி, சத்தியமங்கலம் போலீசார், முருகன் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.