India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவை 24 நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மருத்துவர் ச.உமா,இன்று எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குமர மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு மேற்கொண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகளை பின்பற்ற அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பாராளுமன்ற தேர்தலுக்காக கடலூர் மாவட்டத்தில் துணை ராணுவ படையினர் 450, ஆந்திர மாநில காவல்துறையினர் 150, தெலுங்கானா ஊர்காவல் படையினர் 300, தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 180 மற்றும் கடலூர் ஊர்க்காவல் படையினர், ஓய்வு பெற்ற காவல் துறையினர், ஓய்வு பெற்ற ராணுவத்தினர் என மொத்தம் 4300 காவல்துறையினர் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக கடலூர் எஸ்.பி. ராஜாராம் இன்று தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்காக வாக்குப்பதிவு அலுவலர்கள், காவல்துறையினர், தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் இணையதள மென்பொருள் செயலி வழியாக வாக்குசாவடி வாரியாக மூன்றாம் கட்டமாக பணி ஒதுக்கீடு செய்யும் முறை மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை அருகே சிப்காட் தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் வார விழாவையொட்டி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. விழாவில் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல்ரகுமான் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு தீ பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து விழிப்புணர்வு வழங்கினர்.
வேலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 17) அதிகபட்ச வெயிலாக 104.9°F பாரன்ஹீட் வெயில் பதிவானது. மேலும் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வெளியில் செல்லும் போது குடை, தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு பகுதியில் இன்று இறுதிக்கட்டமாக உதயசூரியன் சின்னத்திற்கு ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் அவர்களை ஆதரித்து தீவிரமாக இன்று வாக்கு சேகரித்தனர். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவடையுள்ள நிலையில் இறுதி கட்ட பரப்புரையாக திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க கோரி திருப்பூர் மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
கடலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தலை (2024) முன்னிட்டு, வரும் 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் நேரில் சென்று வாக்களிக்கலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியரும், கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலருமான அருண் தம்புராஜ் இன்று தெரிவித்துள்ளார்.
திருவாரூர் ஆட்சியர் சாருஸ்ரீ இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தயாராவோம் வாக்களிப்போம்” என வாக்களிக்க தேவையான கீழ்க்கண்ட ஆவணங்களை குறிப்பிட்டுள்ளார். வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, 100 நாள் வேலை அட்டை, மருத்துவ காப்பீடு திட்ட அட்டை, ஸ்மார்ட் கார்டு, ஓட்டுனர் உரிமம், வங்கி புத்தகம், அடையாள அட்டை, அலுவலக அடையாள அட்டை, இதில் ஏதும் இருந்தாலும் வாக்களிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவில் மற்றும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் உண்டியல் திறப்பு இன்று,
திருக்கோவில் ஆய்வாளர் தீப லட்சுமி முன்னிலையில் திறக்கப்பட்டது. திருக்கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் ரொக்கம் மற்றும் நாணயங்களை எண்ணினர்.
இதில் உண்டியலில் ரெக்கம், தங்கம், வெள்ளி உட்பட சுமார் மொத்த மதிப்பு 3,20,000 என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
Sorry, no posts matched your criteria.