Tamilnadu

News April 19, 2024

3 மணி நிலவரப்படி 54.07% வாக்குகள்

image

நாகை மக்களவைத் தொகுதியில் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் பிற்பகல் 3 மணி வரை உள்ள நிலவரப்படி நாகை நாடாளுமன்ற தொகுதியில் 54.07% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்

News April 19, 2024

காஞ்சிபுரத்தில் 3 மணி நிலவரம்: 53 % வாக்குப்பதிவு

image

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்கு பதிவு ஆனது 53 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  காலை 6 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3 மணி நிலவரப்படி 53 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News April 19, 2024

திண்டுக்கல்: சர்கார் பட பாணியில் கள்ள ஓட்டு?

image

பழனி அருகே ஆயக்குடி 44 வது வாக்குச்சாவடியில் விஜய் ரசிகர் மன்றம் ( தமிழக வெற்றி கழகம்) நகர துணை தலைவர் சரவணன் வாக்கு செலுத்த வந்தபோது சரவணன் உடைய வாக்கை வேறொருவர் செலுத்தி விட்டதாக கூறியதால் அதிர்ச்சி அடைந்தார். இதனால் வாக்களிக்க முடியாமல் போன இளைஞருக்கு  ஆதரவாக பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News April 19, 2024

தி.மலை: வாக்குச்சாவடி மையத்தில் குழப்பம்

image

செங்கம், பொரசப்பட்டு கிராமம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு மையத்தில் காலை வாக்குப்பதிவு தொடங்கியபோது வாக்கு பதிவு இயந்திரம் பழுதானதால் சுமார் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. இதனால்,  மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும் என்று வாக்கு பதிவு தலைமை அலுவலர் அறிவித்துள்ளார். 

News April 19, 2024

வாக்கு செலுத்திய சாலமன் பாப்பையா

image

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆரப்பாளையம் ஞான ஒளி புரம் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பட்டிமன்ற நடுவர் மற்றும் பேராசிரியர் சாலமன் பாப்பையா தனது குடும்பத்துடன் வாக்கு சாவடிக்கு வந்து வாக்கினை செலுத்தினார். அப்போது வாக்குச்சாவடி மையத்தில் பணியாற்றிய அலுவலக சாலமன் பாப்பையா அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News April 19, 2024

ஒருவர் கூட வாக்களிக்கவில்லை

image

திருநெல்வேலி மக்களவை தொகுதியில் அடங்கிய, திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பல்லிக்கோட்டை நெல்லை திருத்து கிராம மக்கள், இன்று [ஏப்.19] ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணித்துள்ளனர். அங்குள்ள அலவந்தான்குளம் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு, ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை. இதனால் அந்த வாக்குச்சாவடி வெறிச்சோடி கிடக்கிறது. தீர்க்கப்படாத குடிநீர் பிரச்சனையே, இதற்கு காரணமாகும்.

News April 19, 2024

ஒரு மணி நிலவரப்படி அதிகபட்சமாக ஆலங்குளம் பகுதியில் 43.45 சதவீதம்

image

நெல்லை மாவட்டத்தில் இன்று காலை முதல் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர் இன்று மதியம் ஒரு மணி நிலவரப்படி மாவட்டத்திலேயே ஆலங்குளம் தொகுதியில் 43.45 சதவீதம் ,திருநெல்வேலியில் 36.87%,அம்பாசமுத்திரத்தில் 41.03%,பாளையங்கோட்டையில் 34.32%,நான்குநேரியில் 37.79%,ராதாபுரத்தில் 36.49%வாக்குகள் பதிவாகியுள்ளன .

News April 19, 2024

1 மணி நிலவரப்படி 40.88 %  வாக்குப்பதிவு

image

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் காலை 7 மணியில் வாக்குப்பதிவு துவங்கியது. காலை முதல் வாக்குப்பதிவு மந்தமாக காணப்பட்டது .மேலும் கட்சி தொண்டர்கள் தொடர்ந்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். தற்போது 1 மணி நிலவரப்படி. 40.88 % சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. மேலும் வாக்குப்பதிவானது மாலை 6 மணி வரை நடைபெறுகின்றன

News April 19, 2024

20 கிலோமீட்டர் தூரம் நடந்த வந்து வாக்களித்த இஞ்சிகுழி மக்கள்

image

நெல்லை மாவட்டத்தில் காலை முதல் வாக்குப்பதி பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் இஞ்சி குழி கிராமத்தில் 20 பழங்குடியின  குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் வனப்பகுதி வழியாக 20 கிலோமீட்டர் நடந்து வந்து ஏப்.19 இன்று காரையாறில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

News April 19, 2024

மதுரையில் முதல்முறையாக சூப்பர் அறிவிப்பு!

image

மதுரையில் நடைபெற்று வரும் சித்திரை விழாவில் முதன்முறையாக பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது. பொதுமக்கள் சித்திரை திருவிழா தொடர்பான புகார்களை 99949 09000 மற்றும் 0452-2526888 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!