Tamilnadu

News April 20, 2024

நன்றி அறிக்கை வெளியிட்ட அதிமுக வேட்பாளர்

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜான்சி ராணி போட்டியிடுகின்றார். அவரின் வெற்றிக்கு கடந்த ஒரு மாதமாக உழைத்த திருநெல்வேலி மாவட்ட அதிமுக மற்றும் எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி நேற்று (ஏப்.19) நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News April 20, 2024

வாக்களித்த 1லட்சத்து 66 ஆயிரம் பேர்!

image

சிவகாசி சட்டமன்ற தொகுதி(205) மொத்தம் 233137 வாக்காளர்கள் எண்ணிக்கையை கொண்டதாகும். இதில் நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் 71.39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 81,585 ஆண் வாக்களர்களும் , 84,837 பெண் வாக்களர்களும் , 8 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 1,66,430 வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர் .

News April 20, 2024

தி.மலை: தேர்தல் பணிக்குழுவிற்கு அமைச்சர் பாராட்டு

image

திருவண்ணாமலையில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று(ஏப்.19) காலை தொடங்கி இரவு 6 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து, தி.மலை மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணி வேட்பாளர் திமுகவை சேர்ந்த அண்ணாதுரையை ஆதரித்து பல்வேறு கட்டங்களாக பிரச்சாரம் செய்த திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தேர்தல் பணி குழு பொறுப்பாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

News April 20, 2024

வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் பேக்கிங்

image

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம் நிறைவானதையடுத்து
திருச்சியில் உள்ள ஒரு வாக்குக்சாவடியில்
வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்றது. வாக்கு பதிவு எந்திரங்கள் பத்திரமாக சீல் வைக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணும் மையத்துக்கு அனுப்பும் பணியும் முடிந்தது.

News April 20, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவு நிலவரம்!

image

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று இரவு 7 மணி நிலவரப்படி 39 தொகுதிகளிலும் 72.09 சதவீத
வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 4 எம்பி தொகுதிகளின் வாக்குப்பதிவு நிலவரம்- திருச்சி 71.20 சதவீதமும், சிவகங்கை 71.05 சதவீதமும், கரூர் 74.05 சதவீதமும், ராமநாதபுரத்தில் 71.05 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

News April 20, 2024

மின்னணு இயந்திரங்கள் வைக்கும் வரையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக, விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் வைக்கப்பட உள்ள நிலையில், நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் விவேகானந்தா மகளிர் கல்லூரியில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News April 20, 2024

செங்கல்பட்டு: சாலை விரிவாக்க பணிகள் மும்முரம்!

image

செங்கல்பட்டு மாவட்டம் சூணாம்பேடு அருகே தொழுப்பேடு முதல் சூணாம்பேடு வரையிலான 18 கி.மீ., தார் சாலை உள்ளது. இந்த சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து, நெடுஞ்சாலைத்துறை சார்பாக டெண்டர் விடப்பட்டு, 6.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணி, சில நாட்களுக்கு முன் துவங்கியது.

News April 20, 2024

சேலம்: தேர்தலை புறக்கணித்த மக்கள்!

image

சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சி இ.காட்டூரில் 257 பேர் மட்டுமே வாக்களித்து இருந்தனர். இதனை தொடர்ந்து 42 பேர் 49ஓ படிவத்தை பூர்த்தி செய்து அதில் எங்கள் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஓட்டு போட விருப்பமில்லை என பதிவிட்டிருந்தனர். 18வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று(ஏப்.19) தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று குறிப்பிடத்தக்கது.

News April 20, 2024

பெரம்பலூர்: சீல் வைக்கப்பட்டு அனுப்பப்பட்ட பெட்டிகள்

image

பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு நேற்று(ஏப்.19) நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 77.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியது. தொடர்ந்து, கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்கு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பெரம்பலூர் அருகே உள்ள ஆதவ் பப்ளிக் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கலெக்டர் கற்பகம் வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News April 20, 2024

ஜோலார்பேட்டை அருகே மின் தடை பொது மக்கள் அவதி

image

ஜோலார்பேட்டை அருகே பெரிய கம்மியம்பட்டு பகுதியில் நேற்று மதியம் முதல் இரவு வரை மின் தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் மற்றும் முதியவர்கள் மின் சப்ளை இல்லாமல் மிகவும் அவதிப்பட்டனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தும் மின் சப்ளை சரிசெய்யபடவில்லை. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கியது.

error: Content is protected !!