India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மக்களவைத் தேர்தல் பொன்னேரி பகுதியில் நேற்று காலை 7 மணி தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. 311 பூத்களில் வாக்குப்பெட்டி சீல் வைக்கப்பட்டு வாகனங்களில் ஏற்றி திருவள்ளூர் வேப்பம்பட்டு தனியார் கல்லூரியில் வைப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன.
மக்களவைத் தேர்தல் நிறைவடைந்ததை தொடர்ந்து தி.மலை தேர்தலில் பயன்படுத்திய 1,722 வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும், ஆரணி தொகுதியில் பயன்படுத்திய 1,760 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தி.மலை சண்முகா மேல்நிலைப் பள்ளியிலும் பலத்த பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டது. மேலும், இப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (ஏப்.21) சேலம் மாநகராட்சிக்கு ட்பட்ட பகுதிகளில் அரசு உத்தரவுப்படி இறைச்சி கூடங்கள் மற்றும் கடைகள் செயல்படக்கூடாது. மீறி செயல்படும் இறைச்சி கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணையர் தெரிவித்துள்ளார்.
நாகை தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் பி. பனங்குடி, எம். பனங்குடி, வெட்டி வாழ்க்கை ,காரை மேடு, ஏரிமேடு , சேவாபாரதி ஆகிய பகுதிகள் உள்ளன. இங்குள்ள மொத்த வாக்காளர்கள் 1441 பேரில் நேற்று 708 பேர் வாக்களிக்க செல்லாமல் தேர்தல் புறக்கணிப்பு செய்தனர்.
இங்குள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் சி.பி.சி.எல் விவசாய நிலங்களை சீரழிப்பதாக கூறி இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர்.
கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் சிங்கப்பூரில் மனைவி மாலதி, மகள் புவியரசி (18) மற்றும் மகன்களுடன் வசித்து வருகின்றார். இந்திய குடியுரிமை பெற்ற இவர்களுக்கு இந்தியாவில் ஓட்டுரிமை உள்ளது. அதன்படி புதுவை நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சிங்கப்பூரில் இருந்து குடும்பத்துடன் வந்து வாக்குப்பதிவு செய்தனர். இவர்களில் புவியரசி முதல் முறை வாக்காளர் ஆவார்.
ஈரோடு மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே, தமிழ்நாடு அளவில் முதல் முறையாக ஈரோட்டில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. மேலும் கடந்த 2 மாதங்களாக வெயில் குறையாமல் நீடித்து வருகிறது. இதனால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அதிகபட்சமாக 107.6 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியிருந்தது. இந்நிலையில் இன்று தமிழகத்திலேயே அதிகபட்சமாக, 109.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி நேற்று (ஏப்ரல் 19) கிருஷ்ணகிரி தொகுதி பாஜக வேட்பாளர் சி.நரசிம்மன் தனது குடும்பத்துடன் கிருஷ்ணகிரியில் உள்ள புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கினைச் செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், நாடு முழுவதும் பாஜக 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். குறிப்பாக கிருஷ்ணகிரியில் பாஜக வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களில் உள்ள மதுபான பார்கள் நாளை (ஏப்ரல் 21) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் மது பானங்கள் விற்பனை செய்யக்கூடாது அதையும் மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று (ஏப்.19) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வானிலை ஆய்வு மைய அறிவிப்பின் படி பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று(ஏப்ரல் 19) அதிகபட்சமாக 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 81 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவானது. இதனால் ஒரு சில இடங்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத சாலைகளாக காணப்பட்டது. இதனால் மக்களவைத் தேர்தலில் வயது முதிர்ந்த வாக்காளர்கள் வாக்கு சாவடிக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.
திருநெல்வேலி தொகுதியில் இந்திய கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகிறார். அவரின் வெற்றிக்கு உழைத்த நெல்லை மாநகர திமுக நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், மாநகர திமுக சார்பு அணி நிர்வாகிகளுக்கு நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் நேற்று (ஏப்.19) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.