India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் ஜூலை 13 அன்று நடைபெற உள்ள TNPSC GROUP 1 தேர்விற்கான முழுப்பாட மாதிரி தேர்வுகள் நாளை (ஜூலை.5) காலை 10 மணி முதல் 1 மணி வரை மாவட்ட வேலை வாய்ப்பு (ம) தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 04172291400 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் (ம) மண்பாண்டம் செய்பவர்கள் தங்கள் வசிக்கும் வட்டத்திற்குட்பட்ட நீர் நிலையில் இருந்து வண்டல் மண் (ம) களிமண் எடுத்து பயன்பெற www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மூலமே அனுமதி பெற்று கொள்ளலாம் எனவும், மாவட்டத்தில் உள்ள 434 நீர்நிலைகளில் இருந்து மண் எடுத்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு அடையாள அட்டை தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மாற்று திறனாளிகள் இந்த அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் கும்பகோணத்தில் வருகிற 16ஆம் தேதி KMSS வளாகம் பேருந்து நிலையம் அருகே நடைபெறவுள்ளது. இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அடையாள அட்டை பெற்று பயன்பெற ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தல்.
கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இடைக்கால முன்ஜாமீன் மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம் இடைக்கால முன்ஜாமீன் மனு தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் நாளை ஒத்திவைத்துள்ளார்.
சேலத்தில் அதிமுக நிர்வாகி சண்முகம் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இக்கொலை குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளியையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் 377 விதியின் கீழ் நேற்று (ஜூலை 4) நடந்த விவாதத்தில் கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் சமர்பித்தவை; நான்கு வழிச் சாலையை டவுன் ரயில் நிலையத்துடன் இணைக்க இணைப்பு சாலை வேண்டும், திருவனந்தபுரம் – நாகர்கோவில் இரட்டை ரெயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சமர்பித்தார்.
திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் X தள பதிவில், திமுக இளைஞர் அணிச் செயலாளராக இன்று 6ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து வைகாசி மாத அமாவாசைக்கு நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை நடக்கிறது. இதனை முன்னிட்டு திருப்பத்தூரில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பத்தூரில் இருந்து சிறப்பு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்சி மாவட்டத்தில் காரீப் பருவத்தின் தோட்டக்கலை பயிர்களான, வாழை, வெங்காயம், மரவள்ளி மற்றும் மஞ்சள் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் அந்தநல்லூர்,மணிகண்டம், திருவெறும்பூர்,முசிறி, துறையூர்,வையம்பட்டி, மணச்சநல்லூர் வட்டாரங்களில் பயிர் காப்பீட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பீர்காவில் 2024-2025ம் ஆண்டு காரீப் பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்து கொள்ள ஆட்சியர் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட பயனாளிகளுக்கு மானிய அடிப்படையில் நாட்டுக் கோழிகள் மற்றும் அதற்கான சலுகைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வருகின்ற ஜூலை 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தகவல் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.