India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி 2024 ஜனவரி முதல் ஜூன் வரை கஞ்சா, கொலை, கொலை முயற்சி, போக்சோ வழக்கு, கொள்ளை, வழிப்பறி, வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகள் படி 50 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 29ஆம் தேதி 40 காவல்துறை உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று சிறப்பு உதவி ஆய்வாளர் தலைமை காவலர் கிரேட் ஒன் காவலர் மற்றும் காவலர்கள் என 50 பேரை இடமாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில் இன்று (ஜூலை 4ம் தேதி) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் ராஜாராமன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் விநாயகம், விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் முருகேசன், நெய்வேலி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் சேத்தியாத்தோப்பில் காவல் ஆய்வாளர் ஏழுமலை ஆகியோர் ரோந்துப் பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய காரணத்தாலும் மற்றும் மாம்பழம் சீசன் தொடங்கிய காரணத்தாலும் ஈக்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. மேலும் ஆங்காங்கே மழை நீர் தேங்காமல் பொதுமக்கள் பார்த்து கொள்ள வேண்டும் .ஈக்கள் அதிகம் உற்பத்தி ஆனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவு.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று இரவு 1 மணி வரை நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், சில பகுதியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டம் முழுவதும் 20 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (ஜூலை 4) உத்தரவிட்டார். அதன்படி வேலூர் ஆட்சியர் அலுவலக பொது மேலாளராக இருந்த பாலமுருகன், நீதியியல் அலுவலக மேலாளர் பழனி, வேலூர் தாசில்தார் கோபி உள்ளிட்ட 20 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்ட நிா்வாகம் மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில், ஈரோடு புத்தகத் திருவிழா வரும் ஆகஸ்டு 2 முதல் 13 வரை நடைபெற உள்ளது. இவ்விழா ஈரோடு – சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நூற்றுக்கணக்கான அரங்குகளுடன், பல சிறப்பம்சங்கள் மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவையின் 25ஆம் ஆண்டு விழா மற்றும் ஈரோடு புத்தகத் திருவிழாவின் 20 ஆம் ஆண்டு விழா மிக சிறப்பாக நடத்தப்பட உள்ளது என அறிவக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின் விஜய் வசந்த் எம்.பி. முதல் முறையாக இன்று(ஜூலை 04) நாகர்கோவில் வருகை தந்தார். அவருக்கு குமரி கிழக்கு மாவட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பாக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமையில் பார்வதிபுரம் பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்தோர் பங்கேற்றனர்.
விருதுநகரில் கால்நடை பராமரிப்புத்துறை ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டம் மூலம் மானிய விலையில் பசுந்தீவன பயிர்கள் பயிரிட விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். மேலும் விருப்பமுள்ள கால்நடை வளர்ப்போர் தங்கள் பகுதிகளிலுள்ள, கால்நடை உதவி மருத்துவரை நேரில் அணுகி எழுத்து மூலமாக விண்ணப்பத்தை வருகிற 20.07.24-க்குள் அளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கோவை மேயர் கல்பனா ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள நிலையில் வரும் 8 ஆம் தேதி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ராஜினாமா கடிதம் கவுன்சிலர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன் நகல் நகராட்சி நிர்வாக துறைக்கு அனுப்பப்பட்டு, பின் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படும். தேர்தல் ஆணையம் ஒரு தேதியை அறிவிக்கும் அன்று மேயர் தேர்தல் நடைபெறும்.
Sorry, no posts matched your criteria.