India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை காந்திமா நகரை சேர்ந்த தாமஸ் வில்லியம், சரவணம்பட்டி பகுதியில் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். வழக்கம் போல நேற்றிரவு ஒர்க் ஷாப்பை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில், எதிர்பாரா விதமாக ஒர்க் ஷாப்பில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் மூன்று கார்கள், இரு டூவீலர்கள் தீயில் எரிந்து நாசமாயின.
கோவை காந்திமா நகரை சேர்ந்த தாமஸ் வில்லியம், சரவணம்பட்டி பகுதியில் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். வழக்கம் போல நேற்றிரவு ஒர்க் ஷாப்பை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில், எதிர்பாரா விதமாக ஒர்க் ஷாப்பில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் மூன்று கார்கள், இரு டூவீலர்கள் தீயில் எரிந்து நாசமாயின.
குடவாசலில் குற்றவியல் மாவட்ட நடுவா் நீதிமன்றம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. குடவாசல் பகுதியில் உரிமையில் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா். இதைத்தொடா்ந்து, கீழஅக்ரஹாரப் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட நீதிமன்ற வளாகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
நாடு முழுவதும் இன்று மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், “அனைத்து உயிரினங்களும் அன்போடும் மரியாதையோடும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை போதித்த பகவான் மகாவீரர் பிறந்த தினத்தைக் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எந்து அன்பான இனிய மகாவீரர் ஜெயந்தி நல்வாழ்த்துகள்” என புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி அருகே உள்ள ஆர் சண்முகபுரத்தை சேர்ந்தவர் ரவுடி மாரியப்பன். நேற்று மாலை ஜாகிர் உசேன் நகரில் ஒரு முட்புதரில் நண்பர்களுடன் அமர்ந்து கஞ்சா அடித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் இவரை அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து தாளமுத்து நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை, பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி நேற்று(ஏப்.20) இரவு 9 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று வந்தது. இதனை ரமேஷ்(45) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது, திடீரென பேருந்தில் புகுந்த 10 பேர் கும்பல் டிரைவரை சரமாரியாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்து சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார். போலீசார் 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். தாக்குதல் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பழனி,ஒட்டன்சத்திரம்,ஆத்தூா்,நிலக்கோட்டை, நத்தம்,திண்டுக்கல் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1,812 வாக்குச் சாவடிகளில் வெள்ளிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறைகளுக்கு 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.அந்த வளாகம் முழுவதிலும் 150-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
மேலூர் அருகே கீழவளவு பகுதியில் காரில் நின்று கொண்டிருந்த நவீன்குமார் என்பவர் மீது நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர் டிபன் பாக்ஸ் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் கையில் காயமடைந்த நவீன்குமார் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கீழவளவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த உள்ள நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஹஜ்ரத் முகமது ஷா காதிரி ஒலியுல்லா அவர்களின் 351ம் ஆண்டு வருட கந்துரி எனப்படும் சந்தனக்கூடு திருவிழா, இன்று(ஏப்.21) வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த திருவிழாவில் திரைப்பட இசையமைப்பாளர் A.R.ரகுமான் கலந்துகொண்டார். மேலும் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்றை விட நேற்று வெயில் அளவு சற்று குறைந்து காணப்பட்டது. நேற்று 107.4°F ஆக இருந்த வெயில் இன்று 106°F பதிவானது. மேலும் வேலூரில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வெளியில் செல்லும் போது முன்னெச்சரிக்கையாக இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.