Tamilnadu

News July 3, 2024

இந்திய ரயில்வே தலைவரிடம் தேனி எம்.பி மனு

image

கொடைக்கானல் ரோடு ரயில் நிலையம் மற்றும் தேனி ரயில் நிலையம் இடையிலான 45 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய ரயில்வே பாதை அமைத்திட ரயில்வே வாரிய தலைவர் ஜெயா வர்மா சின்ஹாவை தேனி எம்.பி தங்கதமிழ்ச்செல்வன் இன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தேனி மாவட்டத்தின் வணிகம் மற்றும் சுற்றுலா மேம்படும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

News July 3, 2024

சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு

image

சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை ஜூலை 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை எழும்பூர்- நாகர்கோவிலுக்கு ஜூலை 11, 12, 13, 14, 18, 19, 20, 21 ஆகிய தேதிகளில் இருபுறமும் இயங்கும். இச்சிறப்பு வந்தே பாரத் ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, நெல்லை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

News July 3, 2024

திண்டுக்கல்: ரேஷன் கார்டுதாரர்களுக்கு அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் நியாயவிலை கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நேரத்தில், ஜுன்-2024ம் மாதத்தில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு பெறாதவர்கள் ஜூலை-2024-ம் மாதத்தில் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார். 

News July 3, 2024

சேலம் மாவட்டத்திற்கு மழை

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை சேலம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 3, 2024

 ரயில்வே பணிமனை வேண்டும் என நாகை எம்பி கோரிக்கை

image

நாகப்பட்டினம் எம் பி வை.செல்வராஜ் இன்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வின் வைஷ்னவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் திருவாரூர் ரயில் சந்திப்பில் அடிப்படை கட்டமைப்புகள் உள்ளதால் அனைத்து ரயில்களுக்கான முதன்மை பணிமனை அமைக்க வேண்டும், திருவாரூர்,காரைக்குடி வழித்தடத்தை மின்மயமாக்குதல் வேண்டும், காரைக்கால் திருவாரூர், தஞ்சாவூர் தடத்தினை இரட்டைவழிப் பாதையாக அமைத்திடவும் கோரிக்கை வைத்தார்.

News July 3, 2024

எஸ்.பி தலைமையில் சிறப்பு முகாம்

image

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்  தலைமையில் பொதுமக்கள் குறைதீர் சிறப்பு மனு விசாரணை முகாம் திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இ‌ன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர். இதனை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். 

News July 3, 2024

கோவைக்கு விரைவில் புதிய மேயர் தேர்வு

image

கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக பதவி வகித்த கல்பனா ஆனந்தகுமார் மார்ச் 2022-ல் மேயராக பதவி ஏற்றார். இந்நிலையில் இன்று தனது உடல் நிலை சரியில்லாததால் மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக, ராஜினாமா கடிதத்தை ஆணையருக்கு அனுப்பியுள்ளார். இந்நிலையில் வரும் 10 அல்லது 11ஆம் தேதி புதிய மேயர் தேர்வு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

News July 3, 2024

பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு 

image

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி தென்காசி இசிஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் 9ஆம் நடைபெற உள்ளது. எனவே, இப்போட்டியில் தென்காசி மாவட்ட மாணவர்கள் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

News July 3, 2024

புதுச்சேரி: விரைவில் ஐடி பார்க்?

image

ஐதராபாத் ஹைடெக் சிட்டியில் உள்ள மைண்ட்ஸ்பேஸ் ஐடி பூங்காவை புதுச்சேரி தொழில்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று பார்வையிட்டார்.மைண்ட்ஸ்பேஸ் ஐடி பார்க் தலைமை இயக்க அதிகாரி ஸ்ரீ ஷ்ரவன் குமார்கோன் செயல்பாட்டு மாதிரி குறித்து எடுத்துரைத்தார்.புதுச்சேரியில் தகவல் தொழில்நுட்ப பூங்காவை செயல்படுத்துவது பற்றி  விவாதித்தனர்.புதுச்சேரியிலும் இது போன்ற ஐடி பார்க் வரும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

News July 3, 2024

ஒரு வாரத்தில் 494 கிலோ குட்கா பறிமுதல்

image

சென்னையில் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் படி ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 26ந் தேதி முதல் நேற்று வரையிலான ஒரு வார காலத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில், புகையிலை பொருட்களை கடத்தி வருதல், பதுக்கி வைத்து விற்பனை செய்தல் சம்பந்தமாக 26 வழக்குகளை பதிவு செய்து 30 பேரை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 494 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!