India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இலுப்பூர் மதர் தெரசா கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு மதர் தெரசா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சின்னத்தம்பி தலைமை தாங்கினார் தாளாளர் உதயகுமார் முன்னிலையில் வகித்தார் இயக்குனர் திருமா பூங்குன்றன் வாழ்த்துரை வழங்கினார். இதில் முன்னாள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 440 காசுகளாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாக குறைந்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.127-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.87-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா கீழ்வெண்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மீனா(45). இவர் அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். நேற்று உறவினர்களுடன் பைக்கில் செல்லும்போது அங்குள்ள வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியதில் மீனா தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று(ஏப்.21) உயிரிழந்துள்ளார்.
தென்காசி உட்கோட்டத்தில் 2024 பாராளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினருக்கு தென்காசி சிவா திருமண மண்டபத்தில் இன்று மாலை பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டு இனிப்பு, காரம் ,தேநீர் விருந்து அளித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இதில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர், மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் முத்துவாஞ்சேரி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி முத்துவாஞ்சேரியை சேர்ந்த சுப்பிரமணியன் (50) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர்.அப்பொழுது வீட்டில் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர சுதன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று தங்க குதிரையில் மீனாட்சி அம்மனும் மறக்குதிரையில் சுவாமியும் எழுந்தருளினர். தொடர்ந்து மகா தீபாரதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல, மேம்பாலத்தின் கீழ் திருப்பம் இல்லாததால், மாத்துார் சென்று ‘யூ- டர்ன்’ எடுத்து ஒரகடம் வந்து, இடது திரும்பி, வாலாஜாபாத் சாலை வழியே வாகனங்கள் சென்று வந்தன. கடந்த வாரம் இச்சாலையில், தனியார் ஹோட்டல் அருகே புதியதாக யூ -டர்ன் ஏற்படுத்தப்பட்டது. புதியதாக அமைக்கப்பட்ட யூ -டர்ன் குறித்து எச்சரிக்கை பலகை இல்லை.
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை உள்ளிட்ட மலை பகுதிகளில் நேற்று(ஏப்.21) மாலை பெய்த பலத்த மழையில், சமத்துவபுரம் பகுதியில் நின்ற பலாமரம் முறிந்து விழுந்தது. அப்போது, இடலாக்குடியில் இருந்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட கார் மீது மரம் விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த பெண்கள் உள்பட 4 பேரும் உயிர் தப்பினர். அந்த பகுதியில் இருந்தவர்கள் சேர்ந்து காரில் இருந்தவர்களை மீட்டனர்.
குளித்தலை அருகே ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாள் கோவிலில் நேற்று மாலை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கோவிலில் உள்ள விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிசேகம் செய்யப்பட்டது. பின்னர் கோவில் எதிரே உள்ள நந்தீஸ்வரருக்கு 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று (ஏப்ரல். 21) நடைபெற்றது. நிகழ்ச்சி அமைச்சர்கள் சக்கரபாணி, முத்துசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி (ம) ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.