India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி சுற்றுச்சூழல் சங்கங்களின் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளருமான சுர்ஜித் சவுத்திரி நேற்று (ஜூலை 2) நீலகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். விதிமுறைகளை மீறி பாறைகளை உடைத்து நடக்கும் கட்டட பணியை நிறுத்தக்கோரி சுர்ஜித் சவுத்திரி திடீர் தர்ணாவில் ஈடுபட்டால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை முதுநிலைக்கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், பள்ளி மாணவர்கள் கல்வி உதவி பெற ஏதுவாக அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு துவங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பாளை,நெல்லை ஸ்ரீபுரம் மற்றும் அம்பை தலைமை அஞ்சலகங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. வரும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு இன்னும் 7 நாளே உள்ள நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய அமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி விக்கிரவாண்டிக்கு வருகிறார். அங்கு அவர் வரும் 6, 7, 8 ஆகிய தேதிகளில் வீதிவீதியாக பிரச்சாரம் செய்ய உள்ளார். ஏற்கனவே அமைச்சர்கள், திமுக தலைவர்கள் களமாடும் நிலையில் உதயநிதி வருகை அறிவிப்பால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
கோவை மேயரான கல்பனா மற்றும் அவரது கணவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள், புகார்கள் திமுக தலைமைக்கு சென்றதாகவும், இதை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மேயர் பதவிக்கு கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி, மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, மேற்கு மண்டல தலைவர் தெய்வானை தமிழ்மறை ஆகோயோரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூர், நாகலாபுரம் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்பட்டன. இதற்கான தேதி முடிவடைந்த நிலையில், வரும் 15ஆம் தேதி நேரடி சேர்க்கை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில், எந்த விரலில் மை வைக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் வைக்கப்பட்டது. விக்கிரவாண்டி தேர்தலை பொறுத்தமட்டில் அந்த மை அழியாமல் இருந்தால் இடது கை நடுவிரலிலும், அழிந்திருந்தால் ஆள்காட்டி விரலிலும் வைக்கப்படும் என தேர்தல் துறை பதில் அளித்துள்ளது.
புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், கௌரவப் பதவியான ஊர்க்காவல் படைப்பிரிவுக்கு தேர்வான ஆண்கள் மற்றும் பெண்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதனடிப்படையில் வரும் 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையில், அந்தந்த பிராந்திய காவல் துறை தலைமையிடத்தில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார்.
செங்கோல் என்பது பெண்களை அடிமைப்படுத்துவது போன்றது’ என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் அண்மையில் பேசியிருந்தார். இதுகுறித்து நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை, “மதுரை பெண் மேயருக்கு செங்கோல் வழங்கப்பட்ட நிகழ்வில், எம்.பி. வெங்கடேசன் அதை பிடித்தபடி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார். பிரதமர் செங்கோல் வைத்தால் தவறு. இவர்கள் செய்தால் சரியா? இதுதான் இவர்களின் அரசியல். இது போலி முகத்திரை” என விமர்சித்தார்.
தமிழ்நாடு மீனவர் நலவாரிய உறுப்பினர் சேர்ப்பு சிறப்பு முகாம் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மீனவ கிராமங்களில் ஜூலை 8 முதல் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி, அதனைச் சார்ந்த தொழிலாளர்கள், மீனவர் மகளிர் கூட்டுறவு சங்க உறுப்பினர் அனைவரும் மீனவர் நல வாரிய உறுப்பினராக சேர்ந்து பயன்பெறலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
சேலம் எடப்பாடியில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணத்துக்கு சி.பி.ஐ. விசாரணை கேட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தான் சந்திக்க டெல்லி போவதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை எனத் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் இன்றைக்கு கள்ளச் சாராயம் உயிரிழப்பு அதிகமாக உள்ளது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.