India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கினார். இதில், இலவச பட்டா, வீட்டுமனை, இலவச ஸ்கூட்டர், மிதிவண்டி, உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளுக்கு பொதுமக்களிடமிருந்து 631 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
கோவை ஜிஎஸ்டி, மத்திய வரிகள் ஆணையரகத்தில் GST தின விழா நேற்று(ஜூலை 1) நடைபெற்றது. விழாவுக்கு மத்திய வரிகள் ஆணையா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த 2017-ல் GST அமல்படுத்தப்பட்டபோது கோவை ஆணையரகத்தில் 26,744 பேர் மட்டும் வரி செலுத்துபவா்களாக இருந்தனா். ஆனால் 2023 – 2024 ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 81,552 ஆக உயா்ந்துள்ளது. இது 204% அதிகரிப்பாகும் என்றார்.
சிவகங்கை மாவட்டத்தில் பனை மரங்கள், செங்கல் சூலைகளுக்காக உரிய அனுமதி பெறாமல் வெட்டப்படுகின்றன. இதை தடுக்க கோரி தேவகோட்டையைச் சேர்ந்த அன்னம்மாள் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு குறித்து நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனர் சினேகப்ரியா அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் தோட்டக்கலைத்துறை சார்பில் சொட்டு நீர் பாசனத்திற்காக மானியம் வழங்கப்படுகிறது என்றும், மேலும் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் தரப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
கோவை கணபதி சிஎம்எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் சிஎம்எஸ் கோப்பைக்கான 29ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான இன்விடேஷனல் வாலிபால் போட்டி பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. மாணவர் பிரிவில் 29 அணிகள் மற்றும் மாணவியர் பிரிவில் 23 அணிகள் என 50க்கும் மேற்பட்ட அணிகள் நாக் அவுட் மற்றும் லீக் முறையில் போட்டியிட்டனர். போட்டிகளில் கலந்து கொண்டு மாணவர்கள் தங்களது விளையாட்டு திறமையினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நிதி உதவி திட்டத்திற்கு தகுதியான தேவாலயங்களில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தேனி ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சொந்த கட்டங்களில் இயங்கும் தேவாலயங்களை பழுதுபார்த்தல், புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தேவாலயங்களின் வயதிற்கேட்ப ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சம் வரை மானியத்தொகை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த உதவித்தொகையை பெற மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் சொந்த கட்டங்களில் இயங்கும் தேவாலயங்களை பழுதுபார்த்தல், புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தேவாலயங்களின் வயதிற்கேட்ப ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சம் வரை மானியத்தொகை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த உதவித்தொகையை பெற மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் சொந்த கட்டங்களில் இயங்கும் தேவாலயங்களை பழுதுபார்த்தல், புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தேவாலயங்களின் வயதிற்கேட்ப ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சம் வரை மானியத்தொகை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த உதவித்தொகையை பெற மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் சொந்த கட்டங்களில் இயங்கும் தேவாலயங்களை பழுதுபார்த்தல், புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தேவாலயங்களின் வயதிற்கேட்ப ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சம் வரை மானியத்தொகை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த உதவித்தொகையை பெற மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.