Tamilnadu

News July 2, 2024

சென்னையில் நாளை மின்தடை

image

சென்னையில் நாளை (ஜூலை 3) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்பத்தூர், நொளம்பூர், திருமுல்லைவாயல், ரெட் ஹில்ஸ், புழல், பெரம்பூர், பல்லாவரம், வட பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்றும், மதியம் 2 மணிக்குள் பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்றும் மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 2, 2024

தி.மலை: பள்ளி மாணவர்களுக்கு அறிவிப்பு

image

தி.மலை முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “முதல்வரின் திறனாய்வு தேர்வு ஜுலை.21 அன்று நடைபெறுகிறது. இதில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு மாதம் ரூ.1000 இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும். விருப்பம் உள்ள மாணவர்கள் https://<>www<<>>.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பள்ளிதலைமை ஆசிரியரிடம் நாளைக்குள் ஒப்படைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

News July 2, 2024

மயிலாடுதுறையில் நில அதிர்வு?

image

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்ட நிலையில், மக்கள் அச்சப்பட தேவையில்லை என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் ஏவுதளத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாக ஜெட் விமானத்தின் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. ஜெட் விமானம் தாழ்வாக பறக்கும்போது சில நேரங்களில் நில அதிர்வு ஏற்படக்கூடும். எனவே, மக்கள் அச்சப்பட தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 2, 2024

இளம் கலைஞர்களுக்கு பரிசு வழங்கிய ஆட்சியர்

image

நாகை மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பல்வேறு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற இளம் கலைஞர்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பரிசு தொகைக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

News July 2, 2024

நெல்லையில் 11 தாசில்தார்கள் அதிரடி மாற்றம்

image

நெல்லை மாவட்டத்தில் நிர்வாக காரணங்களுக்காக 11 தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து கலெக்டர் கார்த்திகேயன் நேற்று(ஜூலை 1) உத்தரவிட்டுள்ளார். பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் செல்வன் அரசு கேபிள் டிவி தனி தாசில்தாராக நியமனம். நெல்லை தனி மாவட்ட வருவாய் அலுவலக கண்காணிப்பாளர் கந்தப்பன் தாசில்தாராக பதவி உயர்வு பெற்று சிப்காட் நிறுவன நில எடுப்பு(அலகு 4) தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

News July 2, 2024

சம்பந்தன் மறைவு முதல்வர் இரங்கல்

image

இலங்கை அரசியல் தலைவர் சம்பந்தன் மறைவுக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கை தமிழர்களின் எதிர்காலம் அமைதியாகவும், பாதுகாப்பானதாகவும் அமையவும், சமஉரிமை கிடைத்திட இலங்கை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த மூத்த அரசியல் தலைவர் சம்பந்தன் மறைவு செய்தி மிகுந்த மனவருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

News July 2, 2024

தேசிய போட்டிக்கு தேனி மாணவி தேர்வு

image

கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான வாட்டர் போலோ போட்டியில் பங்கேற்றவர்களில் தமிழக அணிக்கு 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பிளஸ் 1 மாணவியான ஜெமிமா கோல் கீப்பராக தேர்வாகி உள்ளார். இவர் இந்தூரில் ஜூலை 7 முதல் 11 வரை நடக்க உள்ள தேசிய வாட்டர் போலா விளையாட்டில் பங்கேற்க உள்ளார். தேசிய போட்டிக்கு தேர்வான மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

News July 2, 2024

திண்டுக்கல்: பொதுமக்கள் குறைதீர் முகாம்

image

திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் வரும் 4ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம் மேயர் இளமதி தலைமையில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் குழாய் இணைப்பு பெறுதல் , பாதாள சாக்கடை இணைப்பு பெறுதல், சொத்து வரி சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

News July 2, 2024

அரியலூர்: ரூ.41 லட்சம் மதிப்பிலான செல்போன்

image

அரியலூர் மாவட்டத்தில் காணாமல் போன மொபைல் போன்களை CEIR PORTAL- மூலமாக, கண்டுபிடிக்க ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. அரியலூர் மாவட்ட அனைத்து காவல் நிலையங்களிலும், கடந்த மூன்று மாத காலமாக CEIR PORTAL மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட சுமார் ரூ.41.5 லட்சம் மதிப்பிலான 309 மொபைல் போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் அதன் உரிமையாளர்களிடம் வழங்கினார்.

News July 2, 2024

நீலகிரி: சாதித்த கலைஞர்களுக்கு பரிசு

image

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை, கோவை மண்டலம் கலை பண்பாட்டு மையம் சார்பில், கடந்த, பிப்.25ம் தேதி, ஊட்டி கலை கல்லூரியில், மாவட்ட அளவிலான இளைஞர் கலைப் போட்டி நடந்தது.
இதில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு முறையே 6,000 ரூபாய், 4,500 மற்றும் பொன்னாடை போர்த்தப்பட்டது. 3,500 ரூபாய் ரொக்க பரிசு நேற்று மாலை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா வழங்கினார்.

error: Content is protected !!