Tamilnadu

News April 24, 2024

திருப்பத்தூர்: 5 கடைகளுக்கு சீல் வைப்பு

image

ஆம்பூர் அடுத்த உமராபாத்,குட்டகத்தூர், வன்னியநாதபுரம் , மாச்சம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி தலைமையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்ததாக 5 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

News April 24, 2024

கன்னியாகுமரி அருகே மோதல்

image

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு (21-4-24) மினி பேருந்து ஒட்டுனர்களிடையே ஒருவருக்கொருவர் முந்தி செல்வதில் தகராறு ஏற்பட்டது. இதில் மினி பேருந்து ஒட்டுனர் மணிகண்டன் என்பவரை மற்றொரு மினி பேருந்து ஒட்டுனர் வைகுண்டன் இரும்பு கம்பியால் தாக்கியதில் மணிகண்டன் படுகாயமடைந்தார். தகவல் அறிந்து வந்த இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 24, 2024

சென்னை: வாகன ஓட்டிகளுக்கு வந்த குட் நியூஸ்

image

சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லும் மக்களின் வசதிக்காக சென்னை – தடா சாலையின் அகலம் 6 வழி சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. சென்னை-தடா தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணி 95.75% முடிந்து, மீதமுள்ள சாலையின் 1.4 கிமீ நீளத்திற்கு ஒப்பந்ததாரர் சமீபத்தில் பணியைத் தொடங்கினார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய சாலைகளை இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

News April 24, 2024

கோயம்பேடு மார்க்கெட்டில் பூ விலை அதிகரிப்பு

image

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று(ஏப்.21) முதல் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ மல்லி ரூ.450க்கும், முல்லை, ஜாதிமல்லி பூக்கள் ரூ.350க்கும், சாமந்தி, அரளிப்பூ ஆகியவை ரூ.250க்கும் விற்கப்படுகின்றன. மேலும் சம்பங்கி ரூ.400க்கும், பன்னீர் ரோஸ் ரூ.120க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.140க்கும் என விலை உயர்ந்து விற்பனையானது.

News April 24, 2024

தூத்துக்குடி: கலெக்டர் கடும் எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கோடை வெயிலின் தாக்கம் இருப்பதால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருப்பதோடு நண்பகல் வேளையில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் கோடை வெயிலால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தனியாக படுக்கை ஒதுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒஎஸ்ஆர் கரைசல் வழங்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 24, 2024

திண்டுக்கல்: ரயிலில் அடிபட்டு பலி

image

திண்டுக்கல், பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஓய்வு பெற்ற காவலர் மாணிக்கம்(59) என்பவர்; திண்டுக்கல்லில் இருந்து சேலம் செல்லும் சரக்கு ரயிலில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News April 24, 2024

நாமக்கல்: எஸ்பி அலுவலகத்தில் தர்ணா

image

பரமத்தி வேலூர் வக்கீல் ராஜகோபால் தாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நாமக்கல் எஸ்பி அலுவலகத்தில் வக்கீல்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.சுமார் 2 மணி நேரம் போராட்டம் நடைபெற்று வந்தது. எஸ்பி ராஜேஷ் கண்ணன் வக்கீல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் ..இந்நிலையில் சம்பந்தப்பட்ட வழக்கில் விசாரணை மேற்கொள்ளும் இன்ஸ்பெக்டர் ,எஸ்ஐ ஆகியோர் வரவேண்டும் என்றனர்.

News April 24, 2024

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

image

தஞ்சாவூர் காவேரி சிறப்பங்காடி அருகில் இடதுசாரிகள் பொது மேடை சார்பில் 
உலக பாட்டாளி வர்க்கத்தின் தலைவர் லெனின் 154 வது பிறந்தநாளில் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  பாலஸ்தீனத்தின் காசா ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து இஸ்ரேல் வெளியேற்றப்பட வேண்டும். பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து, அறிவிக்க வேண்டும். உக்ரைன், ரஷ்யா போர் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

News April 24, 2024

திருவள்ளூர்: கோடை வெயிலால் இருவர் பலி

image

செங்குன்றம், அண்ணா பேருந்து நிலையம் மற்றும் நேதாஜி நகர் உள்ளிட்ட இரு வேறு இடங்களில் கோடை வெயில் காரணமாக 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரும், 55 வயதுடைய முதியவர் ஒருவரும் நேற்று மயங்கி விழுந்து உயிரிழந்தனர். மேற்கண்ட இருவரின் உடல்களை மீட்ட செங்குன்றம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 24, 2024

புதுச்சேரி: தடுத்தவருக்கு கழுத்தில் கத்தி குத்து

image

காரைக்கால் அடுத்த குரும்பகரம் சேர்ந்த கலையரசன் என்பவருக்கும், அவரது தாய்
மல்லிகாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பக்கத்து வீட்டில்
வசிக்கும் சந்திரபாபு என்பவர் ஏன் தாயிடம் சண்டை போடுகிறாய் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த கலையரசன் சந்திரபாபுவின் கழுத்தில் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் கலையரசனை இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!