India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெத்தநாயக்கன்பாளையம்: இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பழனிமுத்து. இவரது வீட்டில், சந்தவம் என்கிற பாரம்பரிய நூடுல்ஸ் தயாரிக்க பயன்படும் 100 ஆண்டு பழமையான ‘சந்தவமனை ‘ உள்ளது. தேர்கள் செய்ய பயன்படும் இலுப்பை மரத்தில் செய்யப்பட்ட இந்த ‘சந்தவமனை தற்போது வேறெங்கும் பயன்பாட்டில் இல்லை. இதற்கு மாற்றாக எவர்சில்வர், இண்டோலியம் , இரும்பினால் செய்யப்பட்ட சந்தவமனை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இன்று வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதனை ஒட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு முதலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் புனித நீரால் கோபுர கலசங்களுக்கு அபிஷேகமும் , சங்காபிஷேகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தீரன் சின்ன மலை என்று எழுத்துகளால் பொறிக்கப்பட்டு பெருத்துறை சாலையில் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் என்ற வரிகளில் உள்ள எழுத்துகள் காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது. சரியான எழுத்துகளை அமர்த்தி ஆட்சியர் அலுவலகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கோடை வெயில் தொடர்ந்து அக்னி நட்சத்திர நாட்களை நினைவுபடுத்தும் வகையில் கொளுத்தி வருகிறது. இன்று காலை முதல் மாலை வரை வெப்ப தாக்கம் மிக அதிகமாக இருந்தது. இன்று பிற்பகல் மாவட்டத்தில் அதிகபட்ச வெப்ப பதிவு 101.5 டிகிரியாக உயர்ந்தது. வெயில் தாக்கம் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டனர்.
தமிழ்நாடு கேரள எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோயிலுக்கு செல்வதற்கு பாதை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர். பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் விசிக சார்பில் மனு அளிக்கப்பட்டது. விவசாய சங்க தலைமை பொறுப்பாளர் சலேத், பொன்காட்சி கண்ணன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் ராதிகா , சிதம்பரம் உதவி ஆய்வாளர் மகேஷ், விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் சந்திரசேகரன், நெய்வேலி காவல் ஆய்வாளர் பிருந்தா மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்
இந்திய குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் மாணவி அஞ்சுகாவை கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தா லெட்சுமி பொன்னாடை அணிவித்து பாராட்டினார். விலங்கியல் துறைத் தலைவர் பேராசிரியர், வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் லதா, வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வேலாயுத ராஜா மற்றும் மாணவியின் தந்தை பழனி ஆகியோர் உடனிருந்தனர்.
சித்ரா பவுர்ணமி முன்னிட்டு திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக வேலூர் மாவட்டத்திலிருந்து ஏடிஎஸ்பிக்கள் கோட்டீஸ்வரன், கவுதமன் தலைமையில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் உட்பட மொத்தம் 200 போலீசார் இன்று (ஏப்ரல் 22) வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்று உள்ளனர் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில அரசின் கணக்கு மற்றும் கருவூலத்துறை சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி அரசு கருவூலக அலுவலகங்களின் வாயிலாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் 2024ஆம் ஆண்டிற்கான வாழ்வாதார உறுதி சான்றிதழ் வரும் மே 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் சமர்ப்பிக்க தவறினால் ஓய்வூதியம் வழங்க இயலாது கூறப்பட்டுள்ளது.
திருக்குவளை அடுத்த வலிவலத்தில் இருதய நோய் தீர்க்கும் பரிகார ஸ்தலமான இருதய கமலநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக சோமஸ்கந்தர் அம்பாளுடன் தேரில் எழுந்தருள சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில், நாகை மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.