Tamilnadu

News June 28, 2024

ஊடுபயிராக பசுந்தீவனம் வளர்க்க விண்ணப்பிக்கலாம்

image

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தென்னை, பழத் தோட்டங்களில் ஊடுபயிராக பசுந்தீவனம் வளர்க்க விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.3000 முதல் 1 ஹெக்டருக்கு ரூ.7,500 வரை அரசால் மானியமாக வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விபரங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News June 28, 2024

நாகை விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் பயிர்கடன் வழங்க இந்த ஆண்டு ரூ.200 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே கடன் தேவைப்படும் விவசாயிகள் தாங்கள் உறுப்பினராக உள்ள சங்கத்தில் கடன் மனு அளித்து கடன் பெற்றுக்கொள்ளுமாறு ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News June 28, 2024

எஸ்.ஐ உட்பட 33 பேர் பணியிட மாற்றம் 

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனிப்பிரிவு ஏட்டுகளாக ரகுராமன், காந்தி ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்களை ஸ்டேஷனுக்கு மாற்றம் செய்தும், மேலும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் என மொத்தம் 33 பேரை ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் சப்-டிவிஷன் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News June 28, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ்பாஸ் 

image

மாற்றுதிறனாளிகளுக்கு தமிழக அரசால் இலவச பயணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளில் கல்வி பயில்பவர்கள், பணிக்கு செல்பவர்கள், மருத்துவ சிகிச்சையின் பொருட்டு செல்பவர்களுக்கு இலவச பயணச்சலுகை 2023-2024 (31.3.2024 வரை) என உள்ள பழைய அட்டை வைத்திருப்பவர்களை, 30.06.2024 வரை 3 மாத காலத்திற்கு பயணம் நீட்டிப்பு செய்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News June 28, 2024

நாகை மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை பெருக்கவும் தீவன அபிவிருத்தி திட்டங்களை கால்நடை பராமரிப்புத்துறை இந்த ஆண்டு செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்திற்கு மானியம் வழங்க உள்ளதால் எஸ்சி, எஸ்டி இனத்தைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரை அனுகி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் இன்று அறிவித்துள்ளார்

News June 28, 2024

விவசாயிகள் பயிர்களுக்கு காப்பீடு ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்துறை சார்பில் காரிப் பருவத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்கு காப்பீடுகளை விவசாயிகள் செய்வது குறித்த மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் , வேளாண் இணை இயக்குனர் தபேந்திரன், இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் சிவக்குமார், தோட்டக்கலை துணை இயக்குனர் லதா மகேஷ் கலந்து கொண்டனர்.

News June 28, 2024

ஜூலை.1 இல் அக்னி வீரர்கள் தேர்வு

image

தூத்துக்குடி தருவை மைதானத்தில் வருகின்ற ஜூலை.1 முதல் 5 ஆம் தேதி வரை ராணுவத்தில் சேர்வதற்கான அக்னி வீரர்கள் தேர்வு நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த பணிக்கு விண்ணப்பித்திருந்த திருச்சி,கரூர்,பெரம்பலூர், தூத்துக்குடி உள்ளிட்ட 17 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு தேர்வில் பங்கேற்க அனுமதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய பத்திரிக்கை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

News June 28, 2024

நாட்டுக்கோழி குஞ்சுகள் வளர்க்க மானியம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 625 சதுர அடி நிலம் வைத்திருப்பவர்களுக்கு நாட்டுக்கோழிகள் வளர்க்க அரசு 50% மானியம் வழங்குகிறது.இதன் மூலம் 250 நாட்டுக் கோழி குஞ்சுகள் மற்றும் கொட்டகை அமைக்க ரூ.1,56,875 மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருந்தகம்,கால்நடை மருத்துவரை அனுகி ஜூலை.10 க்குள் விண்ணப்பத்தை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 28, 2024

வார்னிங் கொடுத்த திருச்சி கமிஷனர்

image

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி இரவு காவல் பணியில் அசால்ட்டாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என 88 பேருக்கு வார்னிங் மெமோ கொடுத்து நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நடவடிக்கை ஒரு எச்சரிக்கையாகும். இனியும் அலட்சியமாக இருந்தால் சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

News June 28, 2024

ரூ.50,000 பரிசு, தங்கப்பதக்கம்: கலெக்டர் அறிவிப்பு

image

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 28) விடுத்துள்ள அறிக்கையில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு வரும் சுதந்திர தின விழாவில் ரொக்க பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு 10 கிராம் எடை உள்ள தங்க பதக்கம் மற்றும் 50,000 ரொக்கப் பரிசு சான்றிதழ் வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!