India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.660 அடியாக குறைந்ததால் நீரில் மூழ்கியிருந்த ஜலகண்டேஸ்வரர் நந்தி சிலை முழுதும் வெளியே தெரிகிறது. இதையடுத்து, தமிழகம் மற்றும் கர்நாடக பகுதியில் உள்ள சுற்றுலாப் பயணிகள் சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே பண்ணவாடியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் நந்தி சிலையை காண சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
புதுச்சேரி மாநிலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில துணை செயலாளருமான வையாபுரி மணிகண்டனின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியை சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரின் வீட்டில் இன்று சந்தித்து பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் ஆசி பெற்றார்.
நாகை மாவட்டம் திருக்குவளை ஊராட்சிக்கு உட்பட்ட காருகுடி சின்ன வடக்குவெளி பகுதியில், சிறு பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வாய்க்காலின் கோரிக்கை சிறுபாலம் கட்டும் பணி இன்று தொடங்கியது. இந்த பணிகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் முடியும் என ஒப்பந்ததாரர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான புரூஸ், கேரள மாநிலம் ஆற்றிங்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அடூர் பிரகாசை ஆதரித்து இன்று (ஏப்ரல் 23) தீவிர பரப்புரை மேற்கொண்டார். தொடர்ந்து அந்த தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
வடகொரியாவை போன்ற அரசை இந்தியாவில் ஏற்படுத்த முன்னோட்டம் நடந்துள்ளது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சூரத் தொகுதியில் காங். வேட்பாளர் மனுவை நிராகரித்து விட்டு பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு பெற்றதாக அறிவித்துள்ளனர். சூரத்தில் பாஜக வெற்றியை சர்வாதிகார ஆட்சி நடக்கும் வடகொரியாவுடன் ஒப்பிடுவதாக பழனிவேல் தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மின் பணிக்காக பொருட்கள் இருப்பு அறையில் செம்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த கம்பிகள் அடிக்கடி திருடு போனது. இது குறித்து பந்தய சாலை காவல்துறையினர் நடத்தி நேற்று (ஏப்ரல்.22) அங்கு பிளம்பராக வேலை பார்த்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஜெயதாஸ் (28) என்பவர் திருடியது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் சித்ரா பௌர்ணமி – 2024 முன்னிட்டு, கோயிலில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் இன்று (23.04.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் இன்று சுமார் 1/4 மணி நேரத்திற்கு மேலாக நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சாலையின் குறுக்கே வாகனத்தை நிறுத்தி அவ்வழியாக செல்லும் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். சாலையின் ஓரமாக வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யாமல் சாலையின் குறுக்கே வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டு வருவது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக வளாகமான V.R.மாலுக்கு இன்று(ஏப்.23) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபமாகவே சென்னை மற்றும் பல இடங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கோயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலியில் மக்களவை பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அமைதியான முறையில் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிட்டார். அவரின் வெற்றிக்கு கடந்த ஒரு மாதமாக சிறப்பான முறையில் பணியாற்றிய திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் இன்று (ஏப்.23) முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Sorry, no posts matched your criteria.