India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம் கடந்த மார்ச் 20ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் பக்தர் ஒருவரின் செல்போன், ரூ.500 ஆகியவற்றை திருடியதாக தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டன. இதையடுத்து போலீசார் திருட்டில் ஈடுபட்ட சுபத்திரா, சுகந்தி, சுனிதா ஆகிய 3 பேரை இன்று கைது செய்து விசாரிக்கின்றனர்.
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால், நீலகிரி மாவட்ட எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீலகிரிக்கு கேரளாவில் இருந்து கோழி, முட்டை போன்றவைகள் வாகனங்களில் ஏற்றி வருவது மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.
பெருநாழி நாடார் பஜாரைச் சேர்ந்த வேல்முருகன் (37) அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தோப்புராஜன் (30) என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு வேல்முருகனின் கடைக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்த டூவீலரை திருடிக்கொண்டு தோப்புராஜன் தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து பெருநாழி போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் கடைத்தெரு பகுதியில் உள்ள நகை அடகு கடையில் 10 கிராம் எடை கொண்ட இரண்டு தங்க வளையல்களை 40 ஆயிரம் ரூபாய்க்கு சரண்யா என்பவர் அடகு வைத்து சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அதனை சோதனை செய்தபோது நகை போலி என்பது தெரியவந்தது. இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் விசாரணை செய்ததில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை கைது செய்தனர்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் இன்று முதல் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 1889 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இதற்கான வசதி rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை- தஞ்சாவூர் சாலையில் உள்ள கிராமம் ஆதனக்கோட்டை. ஊருக்குள் நுழையும்போதே முந்திரி மணம் மூக்கைத் துளைக்கிறது. அந்த வகையில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் தயாரிப்பின் கீழ் முந்திரி விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இங்கு குடிநீர், பேரீச்சை, ராவா லட்டு, நட்ஸ் & பிற ஸ்நாக்ஸ் வகைகளும் விற்பனை செய்யப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு குற்ற செயல்கள் குறித்தும், மோசடிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஏப்.23) வெளியிட்டுள்ள அறிக்கையில் உங்களுக்கு பரிசு விழுந்ததாக கூறி, செல்போனில் வரும் போலியான Message-யை நம்பி OTP, PIN, Password போன்றவற்றை யாரிடமும் பகிர வேண்டாம். ஒருவேளை பாதிக்கப்பட்டால் 1930 என்ற எண்ணை அழைக்கவும் என தெரிவித்துள்ளனர்.
கோடை காலங்களில் வெப்பம் காரணமாக கோழி உற்பத்தி பாதிக்கப்படும். இந்த காலங்களில் கோழிகள் உணவு உண்ணுவதை குறைத்து நீரை அருந்துவதை மட்டுமே அதிகம் செய்யும் என்பதால் உற்பத்தி குறைவாகவே இருக்கும். இந்த நிலையில், இன்று (ஏப்ரல்.23) கோவை மாநகரின் பல இடங்களில் கோழி இறைச்சி கடைகளில் 1 கிலோ கறி ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள பழக்கடைகளில் இன்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மாம்பழ சீசன் தொடங்கிவிட்டதால், மாம்பழம் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ரசாயன கற்கள் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டதா என அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை கைப்பற்றி அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு அஅபராதம் விதித்தனர்.
விழுப்புரத்தில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் சமூக நலத்துறை, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் மிஸ் கூவாகம் 2024 நிகழ்ச்சி நடந்தது. இதில் திருச்சி, சேலம், சென்னை, துாத்துக்குடி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, ஈரோடு, கோவை பகுதிகளை சேர்ந்த 27 திருநங்கைகள் பங்கேற்றனர். இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, ரியா மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.