India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 மக்களவைத் தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 4,78,207 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 1,51,573 வாக்குகளும், பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 1,10,106 வாக்குகளும் பெற்று தோல்வியை தழுவியுள்ளனர்.
திருச்சி மக்களவைத் தொகுதி பொது பார்வையாளர்கள் ராஜிவ்பிரசாத், தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் இன்று திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சித் தலைவருமான பிரதீப் குமாரிடமிருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மதிமுக வேட்பாளர் துறை வைகோ பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் திமுக அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யா மொழி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 4 லட்சத்திற்கும் மேல் வாக்கு பெற்று வெற்றியை தன் வசப்படுத்தியுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சேவியர் தாஸ் 2 லட்சமும், பாஜக வேட்பாளர் தேவநாதன் 1 லட்சத்திற்கு மேல் வாக்குகள் பெற்றனர். இத்தொகுதியில் காங்கிரஸ் “கை” ஓங்கியுள்ளது.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 19 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 19686 வாக்குகளும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 19205 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 7531 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 3376 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் 19 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 2804 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 29 வது சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 7,26,756 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 2,60,984 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 2,01,405 வாக்குகளும், நாதக வேட்பாளர் 1,34,464 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி ஆர் பாலு 4,65,772 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் ரவிக்குமார் (விசிக) 4,52,178 வாக்குகள் பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 3,83,740 வாக்குகளும், பாமக வேட்பாளர் 1,71,903 வாக்குகளும், நாதக வேட்பாளர் 54,584 வாக்குகள் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பெற்று வெற்றியை நழுவ விட்டனர். இதன்மூலம் ரவிக்குமார் 2வது முறையாக எம்பியாகி உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜூன்- 4) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு 7,லட்சத்து 11ஆயிரத்து 639 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட அதிமுக வேட்பாளர் பிரேம் குமார் 256538 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அதிமுக வேட்பாளரை விட 4,55,101 வாக்குகள் வித்தியாசத்தில் டிஆர் பாலு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் 2வது முறையாக போட்டியிட்ட ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் தோல்வி அடைந்தார். பாஜக சார்பில் போட்டியிட்ட அவர், டெபாசிட்டை இழந்து பரிதாப தோல்வி அடைந்தார். அருண் நேருவை விட 4,20,941 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார் பாரிவேந்தர். கடந்த முறை திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற அவர், பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
2024 மக்களவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு 7,லட்சத்து 11ஆயிரத்து 639 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட அதிமுக வேட்பாளர் பிரேம் குமார் 256538 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அதிமுக வேட்பாளரை விட 4,55,101 வாக்குகள் வித்தியாசத்தில் டிஆர் பாலு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.