Tamilnadu

News April 25, 2024

பெரம்பலூர் : கடிதம் அனுப்பும் போராட்டம்

image

மத வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இன்று கட்சியின் மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன் தலைமையில், பெரம்பலூரில் தலைமை அஞ்சலகத்திலிருந்து தேர்தல் ஆணையத்திற்கு விரைவு கடிதத்தின் மூலம் நூற்றுக்கு மேற்பட்ட கடிதங்களை அனுப்பி வைத்தனர். இந்த கடிதம் அனுப்பும் போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News April 25, 2024

காட்டு வீர ஆஞ்சிநேயர் கோவிலின் நம்பிக்கை

image

கிருஷ்ணகிரியில் அமைந்துள்ளது காட்டு வீர ஆஞ்சிநேயர் கோவில். மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ள இக்கோவிலில் கர்ப்ப கிரகத்தில் 2500 ஆண்டுகள் பழமையான ஆஞ்சிநேயர் சிலை உள்ளது. பக்தர்களுக்கு சிவப்பு நிற துணிப்பை இக்கோவிலில் தரப்படுகிறது. பிரார்த்தனை செய்து விட்டு மீண்டும் கோவிலில் ஒப்படைக்க வேண்டும்.பின் 3 மாதங்களுக்கு பின் பையை அப்புறப்படுத்துவார்கள்.இதற்குள் அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுவதாக நம்பப்படுகிறது

News April 25, 2024

கள்ளக்குறிச்சி: ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த வாசுதேவனூர் கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டுள்ளது. சீலிடப்பட்டுள்ள அறைகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஷ்ரவன் குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

News April 25, 2024

நிதி நிறுவன ஊழியர்கள் இருவர் கைது

image

கோபிச்செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சிலர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளனர். தொடர்ந்து கடன் தொகையை அவர்கள் செலுத்தி வந்த நிலையில் சில தவணைகள் செலுத்தவில்லை. இதனால் நிதி நிறுவனத்தினர் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து விளக்கம் கேட்ட வழக்கறிஞர் சென்னியப்பன் என்பவரையும் நிதி நிறுவனத்தினர் மிரட்டியுள்ளனர். இதனையடுத்து கார்த்திக், நடராஜனை போலீஸார் இன்று கைது செய்தனர்.

News April 25, 2024

எச்சரித்த மாவட்ட ஆட்சியர்

image

திருவண்ணாமலையில் சித்ரா பெளர்ணமி கிரிவலம் நேற்று தொடங்கியது. இதில் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது கடுமையான கூட்ட நெரிசலுக்கு இடையே, நோயாளி இல்லாமல் சைரன் ஒலித்தப்படி ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அந்த ஆம்புலன்ஸை அட்சியர் பாஸ்கர பாண்டியன் நிறுத்தி கடுமையாக எச்சரித்து அனுப்பினார்.

News April 25, 2024

பழமைவாய்ந்த கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்

image

கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இக்கோவிலில் கரூவூராருக்கு தனி ஆலயம் அமைந்துள்ளது. இத்தலத்தில், புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டதாகவும், எறிபத்த நாயனார் தொண்டு செய்ததாகவும், தலவரலாறு கூறுகிறது. சுயம்பு லிங்கமான பசுபதீஸ்வரருக்கு, பசு தானாக பால் சுரந்ததாக நம்பப்படுகிறது. மிக பழமை வாய்ந்த இக்கோவில் திராவிடக் கட்டடக்கலையைக் கொண்டுள்ளது.

News April 25, 2024

வெளியானது தேர்வு முடிவுகள்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் தட்டச்சு தேர்வானது நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வினை எழுதினர். இதில் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இருபிரிவுகளின் கீழ் நடைபெற்ற தேர்வு முடிவுகள் இன்று(ஏப்.24) வெயிடப்பட்டது.<> https://tndtegteonline. in/GTEOnline/ <<>>என்ற லிங்க் கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

News April 25, 2024

விருதுநகரில் ஜப்தி

image

விருதுநகரை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி மகாலட்சுமி கடந்த 2020 ஆம் ஆண்டு அரசு பேருந்து மோதி உயிரிழந்தார். இது தொடர்பாக இழப்பீடு கோரி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் ராஜசேகர் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து நீதிபதி ஹேமந்தகுமார் கடந்த 2023 ஆம் ஆண்டு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். தற்போது வரை இழப்பீடு வழங்காததால் நேற்று ஜீப் ஜப்தி செய்யப்பட்டது.

News April 25, 2024

நாமக்கல் 2024-2025 கூட்டுறவு பயிற்சி

image

நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2024-25 ஆம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி நடைபெற்று வருகிறது. துவங்குகிறது. இந்த ஆண்டிற்கான, மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு வருகின்ற 29ம் தேதி முதல் முன்பதிவு துவங்குகிறது. வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கி ஓராண்டு காலத்திற்கு இரண்டு பருவ முறைகளில் பயிற்சி நடைபெறும். பயிற்சிக்கான பாடத்திட்டம் தமிழில் மட்டுமே நடத்தப்படும்.

News April 25, 2024

தென்காசி: மாணவர்களே இந்த நாள் மறந்துடாதீங்க

image

தென்காசி மாவட்ட அளவில் உயர் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி 26 ஆம் தேதி பகல் 11 மணிக்கு தென்காசி இசிஇ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த கல்வியாண்டு 11,12 ஆம் வகுப்பு முடித்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தொழில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள கல்லூரி கல்வி பயில்வதற்கான வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!