India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சுழி அருகே இசலி கிராம நிர்வாக அலுவலர் குணசுந்தரி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அங்குள்ள மதுபான கடை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதித்ததில் அதில் அனுமதி இன்றி சட்ட விரோதமாக 300 மூடைகளில் கூழாங்கற்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. இது குறித்து நரிக்குடி போலீசார் லாரியை பறிமுதல் செய்து இருவர் மீது நேற்று ஏப்ரல் 24 வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
விருத்தாசலம் அடுத்த முகுந்தநல்லூரை சேர்ந்தவர் வைத்தியநாதன் மகன் விஜயகுமார் (19).டூவீலர் மெக்கானிக் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது முன்னால் சென்ற மகேந்திரா பிக்அப் வேன் தாறுமாறாக சென்று திடீரென்று பிரேக் போட்டதால் விஜயகுமார் ஓட்டி சென்ற பைக் மீது வேன் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.விருதை இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.
திருச்சியில், நேற்று 104 டிகிரி வெயில் வெளுத்து வாங்கியது. வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல முடியாமல் தவியாய் தவித்தனர். மேலும் சாலைகளில் செல்வோர், குடை பிடித்த படியும் துணிகளால் முகத்தை மூடிய படியும் சென்றனர். இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர் .திருச்சி மாநகரின் சாலைகளில் போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மக்கள் வெளியில் வந்தனர்.
எருமப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (45). ஓட்டல் நடத்தி வந்தார்.தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால்,ரவி அதிகளவில் கடன் வாங்கி, ஓட்டலை நடத்தி வந்துள்ளார்.கடனை திரும்ப கட்ட முடியாமல், சிரமப்பட்டு வந்துள்ளார்.மனவேதனையடைந்த ரவி,நேற்று முன்தினம் இரவு, தற்கொலை செய்து கொண்டார்.நேற்று காலை, அவர் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். நேற்று எருமப்பட்டி போலீசார் சடலத்தை கைப்பற்றினர்.
தமிழகம் முழுவதும் சித்திரை திருவிழா மற்றும் சித்ரா பவுர்ணமி திருவிழாவும் நடந்து முடிந்தது. குறிப்பாக மதுரையில் அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி உள்ளார். இந்த விழாக்களால் ராமநாதபுரத்தில் கடந்த சில வாரங்களாக மல்லிகைபூ , பிச்சிப்பூ, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களும் பல மடங்கு விலை அதிகமாக இருந்தது. தற்போது விழாக்கள் முடிந்த நிலை யில் ராமநாதபுரத்தில் அனைத்து பூக்களின் விலையும் வெகுவாக குறைந்தது.
தமிழகத்தில் பல முக்கிய மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளியது,சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக புகார் எழுந்தது. அதை தொடர்ந்து கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 34 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். உச்சநீதிமன்ற உத்தரவின் படி கரூர் உட்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சுழி அருகே இசலி கிராம நிர்வாக அலுவலர் குணசுந்தரி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அங்குள்ள மதுபான கடை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதித்ததில் அதில் அனுமதி இன்றி சட்ட விரோதமாக 300 மூடைகளில் கூழாங்கற்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. இது குறித்து நரிக்குடி போலீசார் லாரியை பறிமுதல் செய்து இருவர் மீது நேற்று ஏப்ரல் 24 வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
எருமப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (45). ஓட்டல் நடத்தி வந்தார்.தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால்,ரவி அதிகளவில் கடன் வாங்கி, ஓட்டலை நடத்தி வந்துள்ளார்.கடனை திரும்ப கட்ட முடியாமல், சிரமப்பட்டு வந்துள்ளார்.மனவேதனையடைந்த ரவி,நேற்று முன்தினம் இரவு, தற்கொலை செய்து கொண்டார்.நேற்று காலை, அவர் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். நேற்று எருமப்பட்டி போலீசார் சடலத்தை கைப்பற்றினர்.
திருவாரூர், மன்னார்குடி அருகே உள்ள கருவாக்குறிச்சி கேசிசியின் பதான் பாய்ஸ் நண்பர்கள் சங்கம் சார்பில் முப்பதாம் ஆண்டு மின்னொளி சுழற்கோப்பைக்கான சூப்பர் “8” கிரிக்கெட் போட்டி விழா வரும் 27.04.24 (ஞாயிற்றுக்கிழமை) கருவாக்குறிச்சி அரசினர் மேல்நிலை பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்துக்கொள்ளுமாறு இளைஞர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினம் அருகே கூட்டுப் புலி என்ற இடத்தில் கோழி லோடு ஏற்றச் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள புளிய மரத்தில் நேற்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழங்கியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.