India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூரில் 21 மிமீ, குருங்குளத்தில் 26 மிமீ, திருக்காட்டுப்பள்ளி 13 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும், ஒரத்தநாடு 22 மிமீ, வெட்டிக்காடு 23 மிமீ, பட்டுக்கோட்டை 34 மிமீ, பேராவூரணி 42 மிமீ, அதிராம்பட்டினம் 20 மிமீ, மதுக்கூர் 26 மிமீ என மொத்தம் 332 மிமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

மணமேல்குடி அருகே பொன்நகரம் கடற்கரை கிராமத்தில் இருந்து திருமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நாட்டு படகில் நேற்று (ஜன.10) திருமூர்த்தி, மணிகண்டன் விநாயகம், மணிகண்டன் என நான்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் இதுவரை கரை திரும்பாததால் அவர்களை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் மற்றும் சக மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி குரூஸ்புரத்தை சேர்ந்த டேனியல் மாநகர திமுக மீனவரணி அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி மெட்டில்டா தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். டேனியல் தனது பைக்கை வீட்டின் முன்நிறுத்தியிருந்தார். இந்நிலையில், மர்ம நபர்கள் அந்த பைக்குக்கு தீ வைத்துவிட்டு தப்பியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வடபாகம் போலீசார் விசாரணையில் சாம்சன் என்பவர் பைக்கை தீ வைத்து எரித்தது தெரியவந்தது.

சிவகங்கை மாவட்டத்தில் பெண் விவசாயிகள் தாட்கோ சாா்பில் வழங்கும் நன்னிலம் மகளிா் நில உடமை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் விவசாயத் தொழிலாளா்கள் நிலம் வாங்குவதற்கு இந்தியன் ஓவா்சிஸ் வங்கியின் மூலமாக குறைந்த வட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது. எனவே பெண்கள் மாவட்ட தாட்கோ அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையை மேம்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, கடற்கரையை தூய்மையாக பராமரிக்கவும், கடல் வளத்தை பாதுகாக்கும் வகையிலும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘மெரினாவில் கடை வைத்திருப்போர் மற்றும் சுற்றுலா பயணிகள் குப்பைகளை கொட்டக்கூடாது. விதிகளை மீறி குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்’ என கூறியுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இன்று (ஜனவரி 11) சேலம் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சேலம் மக்களே… உங்க ஏரியால இப்போ மழை பெய்யுதா? இல்ல மேகமூட்டமா இருக்கா? உடனே கமெண்ட் பண்ணுங்க!

ராணிப்பேட்டையில் போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். <

கிருஷ்ணகிரியில் போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். <

தி.மலையில் போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். <

புளியங்குடி அருகே முள்ளிக்குளத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தருண்குமார் (18), சூர்யா(18) இருவரும் நேற்று இரவு சங்கரன்கோவில் சாலையில் பைக்கில் சென்றனர். அப்போது அங்கு சென்ற டிராக்டர் மீது பைக் மோதியது. இதில், பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த தருண்குமார் பலத்த காயமடைந்தார். படுகாயமடைந்த தருண்குமாரை புளியங்குடி G.H-ல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.