India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரியில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

மதுரை HCL ஐடி நிறுவனத்தில் காலியாக Freshers – Process Associate/ Customer Service Reporesentative – Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஏதாவது ஒரு டிகிரி மற்றும் பணி அனுபவம் இல்லாதவர்களும் இங்கு <

போடி பகுதியை சேர்ந்தவர் காஜாமைதீன். இவரது மனைவி ரதியா பானு. இவர்களது நண்பர் குருவுலட்சுமி. இவர்கள் மூவரும் சேர்ந்து போடி பகுதியில் ஒரு வீட்டை வாடகை எடுத்து பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளனர். இதுகுறித்து போடி ஒன்றிய விரிவாக்க அலுவலர் பூபதி அளித்த புகாரின் பேரில் போடி நகர் போலீசார் காஜாமைதீன், ரதியாபானு மற்றும் குருவுலட்சுமி மூவரையும் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (ஜன.10) காலை முதல் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக பொன்மலை பகுதியில் 33.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் ஜங்ஷன் பகுதியில் 25.8 மி.மீ, நவலூர் குட்டப்பட்டு பகுதியில் 20.5 மி.மீ, மருங்காபுரி பகுதியில் 24.4 மி.மீ மாவட்டம் முழுவதும் 304.5 மில்லி மீட்டரும், சராசரியாக 12.69 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியபட்டணம் பகுதி மீன்பிடித் தொழிலாளி வில்லியம்(70). இவர் நேற்று காலை 40 மீனவர்களுடன் சேர்ந்து கரைமடி வலையை கரையில் இழுத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மணவாளாக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் (ஜனவரி – டிசம்பர்) 17,463 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் 37,914 பேர் பயனடைந்துள்ளதாக மருத்துவமனை டீன் தேவி மீனால் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இளைஞர்கள் தங்கள் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததானம் செய்வது அதிகரித்துள்ளதால், இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது என அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் கிராமப்புறங்களில் பாரத் நெட் திட்டத்தின் கீழ், உயா்தர இணைய சேவைகளை வழங்குவதற்கு, ஆா்வமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ந.மிருணாளினி தெரிவித்துள்ளாா். ஆா்வமுள்ளவா்கள் இணையதளம் மூலம் ஜன.14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு, 044 -24965595 என்ற எண்ணில் தொடா்புகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் 2 குழந்தைகள் வாகனம், 1 பைக், வெண்டிலேட்டர் வசதி கொண்ட 6 நவீன ஆம்புலன்ஸ் என மொத்தம் 26 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் உள்ளது. இவை தேனி மருத்துகல்லுாரி, முக்கிய மருத்துவமனைகள், விபத்து அதிகம் நடக்கும் பகுதிகள் என ஆங்காங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 108 ஆம்புலன்ஸ் சேவையால் 36,779 பேர் பயன்பெற்றுள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்த டிஎஸ்பிக்கள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி வேலூர் மாவட்டம் காட்பாடியில் டிஎஸ்பியாக பணியாற்றிய பழனி, ராணிப்பேட்டை மாவட்ட குற்றப்பிரிவுக்கு டிஎஸ்பியாகபணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், கடலூர் சேத்தியாத்தோப்பில் பணியாற்றிய விஜயகுமார் காட்பாடிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.