Tamilnadu

News June 4, 2024

காஞ்சிபுரத்தில் வாக்கு எண்ணும் பணி தொடக்கம்

image

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் தபால் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் திமுக – 100,

அதிமுக – 50,

பாமக – 0,

நாம் தமிழர்-0 . மேலும், வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

News June 4, 2024

உதகை திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை

image

நாடாளுமன்ற பொது தேர்தலில் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் காலை முதலே விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் தொடங்கிய நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான தபால் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை வகித்து வருகிறார்.

News June 4, 2024

உதகை: தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

image

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த நிலையில் தற்போது நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குகள் தேர்தல் முகவர்கள் வேட்பாளர்கள் முன்னிலையில் விறுவிறுப்பாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு கொண்டிருக்கிறது.

News June 4, 2024

புதுச்சேரியில் பாஜக முன்னிலை

image

புதுச்சேரியில் முதல் கட்டமாக தபால் வாக்குகள் அந்தந்த தொகுதி வாரியாக ஒரே அறையில் வைத்து எண்ணும் பணி துவங்கியுள்ளது. இந்த தபால் வாக்கு எண்ணிக்கையில் தற்போது பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் முன்னணியில் உள்ளார்.

News June 4, 2024

இன்று வெற்றி பெறும் வேட்பாளர் யார்?

image

சிவகங்கை மக்களவை தொகுதி(31)ல் போட்டியிட்ட வேட்பாளரின் வாக்குகள் 6 தொகுதியில் 1873 வாக்குச்சாவடியில் 84 (இவிஎம்) இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. சிவகங்கை தொகுதிக்கான வெற்றி வேட்பாளர் யார்? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். காங்கிரஸ் கட்சி பாஜக கூட்டணி கட்சி நாம் தமிழர் கட்சி ஆகியோரிடம் போட்டி நிலவுகிறது.

News June 4, 2024

மதுரையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

image

நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

News June 4, 2024

தென்காசியில் செய்தியாளர்கள் போராட்டம்

image

தென்காசி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தபால் வாக்குகள் எண்ணிக்கை ஸ்ட்ராங் ரூம் திறப்பு உள்ளிட்ட எந்த தகவல்களையும் செய்தியாளர்கள் சேகரிக்க முடியாத நிலை உள்ளது. மொத்தமுள்ள பத்திரிகையாளர்களில் ஏழு பேரை மட்டுமே முதல் கட்டமாக அழைத்துச் சென்றனர். அவர்களையும் பிஆர்ஓ அல்லது ஏபிஆர்ஓ உடன் வந்தால் தான் அனுமதிப்போம் என தடுத்து நிறுத்தியதால் செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News June 4, 2024

விருதுநகர்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

image

நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

News June 4, 2024

தென்காசி வாக்கு என்ன மையத்தில் தடையற்ற மின்சாரம்

image

தென்காசி மக்களவைத் தொகுதிக்கு வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் யூ.எஸ்.பி கல்லூரி உலகத்தில் இன்று முழுவதும் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கு மின்வாரியத்தினர் ஏற்பாடு செய்தனர்.அந்த பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் இணைப்பு தரத்தை முன்னதாக நேற்று இரவு இன்று அதிகாலையிலும் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.தொடர்ந்து மின்வாரிய குழுவினரும் அங்கு முகாமிட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

News June 4, 2024

விழுப்புரம்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

image

நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

error: Content is protected !!