India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கோவை வடக்கு சட்டமனற் தொகுதியில் 13ஆம் நம்பர் மேஜையில் இவிஎம் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.ERROR என்று காட்டியத்ஹல் ஏஆர்ஓ தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஆய்வு செய்யபட்டு வருகிறது.
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி: தி.நகர் தொகுதிக்குட்பட்ட 6,8,11 ஆகிய மேஜைகளில் உள்ள இவிஎம் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்கு எண்ணிகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான தபால் வாக்குகள் எண்ணிக்கையில் காங்கிரஸ் தற்போது முன்னிலை வகித்து வருகிறது. தொடர்ந்து இரண்டு சுற்றுகளாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. மேலும் ஏராளமான அலுவலர்கள் தீவிரமாக தபால் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் தபால் வாக்கு முடிவுகள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச் கோயில்களில் இரவு நேர காவலர்களாக பணியாற்ற மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வெளியிட்ட செய்தி குறிப்பில் திருச்சி மாநகரப் பகுதியில் உள்ள கோயில்களில் இரவு வேலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். முன்னாள் படை வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற போலீசார்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 62க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று நேற்று அறிவித்துள்ளது.
கரூர் மக்களவைத் தொகுதியின் வாக்குகள் எனப்படுகின்றன. வாக்கு என்னும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக தபால் வாக்குகள் அந்தந்த தொகுதி வாரியாக ஒரே அறையில் வைத்து எண்ணும் பணி துவங்கியுள்ளது. இந்த தபால் வாக்கு எண்ணிக்கையில் தற்போது காங்.வேட்பாளர் ஜோதிமணி முன்னணியில் உள்ளார்.
தென்காசி தனி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தேர்தல் பார்வையாளர் அர்ச்சனாதாஸ் பட்நாயக் அவர்கள், தேர்தல் பொதுப்பார்வையாளர் டோபேஸ்வர் வர்மா தலைமையில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் Strong Room திறக்கப்பட்டு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
திருவள்ளூர் தொகுதியில் இன்று காலை 8.00 மணி முதல் தபால் வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. 8.45 மணி நிலவரப்படி தபால் வாக்கில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் முன்னிலையில் உள்ளார். வாக்கு விபரம் பின்வருமாறு: காங்கிரஸ் — 700; தே.மு.தி.க — 500; பா.ஜ.க —100; நா.த.க– 20. மேலும் தபால் வாக்கு தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பதிவான 30 விழுக்காடு தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இத்தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 4717, தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து 2567, பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 1961, நாம் தமிழர் கட்சி மணிவாசகம் 527 வாக்குகள் இதுவரை பெற்றுள்ளனர்.
தேர்தல் ஆணையம் வாக்கு மின்னணு இயந்திரம் சரியாக 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவக்கப்படும் என தெரிவித்திருந்தது. தற்போது இந்த நிலையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான குன்னூர், ஊட்டி, கூடலூர் மேட்டுப்பாளையம், பவானிசாகர், அவிநாசி ஆகிய 6 தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மேதைகளில் அடுக்கப்பட்டு வாக்குகள் என்ன துவங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.