Tamilnadu

News June 3, 2024

அதிமுக செயலாளர் அறிவுரை

image

திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேச ராஜா இன்று தெரிவித்ததாவது, நாளை
வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் முகவர்கள் 06.30 மணிக்குள் வாக்கு எண்ணும் அறைக்கு செல்ல வேண்டும். அதற்கு பின்னர் சென்றால் அனுமதிக்க மாட்டார்கள். சீக்கிரம் சென்றால்தான் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட டேபிள்களில் வாக்குப்பதிவு எந்திரம் நமது கண்ணில் தெரியும். கடைசி வரை முகவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

News June 3, 2024

விருதுநகர் அருகே விழாவிற்கு சென்றபோது ஏற்பட்ட விபத்து

image

திருச்சுழி அருகே மேல கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தன் (45). முத்தன் தனது உறவினர் காதணி விழாவிற்காக தனது மனைவி & 10 வயது மகனுடன் பைக்கில் பனைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.‌ அப்போது மைலி பஸ் ஸ்டாப் அருகே எதிரே வந்த பைக் மோதி முத்தன் அவரது மனைவி மற்றும் மகன் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.விபத்து குறித்து திருச்சுழி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்

News June 3, 2024

தாளவாடி: மூங்கில் மரம் விழுந்து பாதிப்பு

image

தாளவாடி அடுத்த ஆசனூர், திம்பம், கேர்மாளம், திங்களூர் ஆகிய பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. கேர்மாளம் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் காடுபசுவன்பாளையம் அருகே மூங்கில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாததால் மலைக்கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 

News June 3, 2024

வாக்கு எண்ணிக்கை: 1000 போலீஸ் பாதுகாப்பு

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு பதிவான வாக்குகள் நாளை (ஜூன் 4) பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளது. இதற்காக ஏற்கனவே அந்தப் பகுதியில் ராணுவப் படையினர் உள்ளிட்ட மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படுகிறது. மொத்தம் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 3, 2024

4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை டாஸ்மாக் கடைகள் மூடல்

image

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 2) தெரிவித்ததாவது, பார்லிமென்ட் தொகுதி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 4-ம் தேதி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் மூடப்பட வேண்டும். இதனை மீறி மதுபானங்களை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

News June 3, 2024

திருச்சி சூர்யா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

image

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் குறித்து அண்மையில் பாஜகவின் திருச்சி சூர்யா தெரிவித்த கருத்துக்கு நாம் தமிழர் கட்சியினரிடமிருந்து எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து வாசன் வேலியில் உள்ள திருச்சி சூர்யா வீட்டிற்கு சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் முகமது ஜாபர் தலைமையில் நேற்று பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது

News June 3, 2024

மேட்டூரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் 

image

விடுமுறை நாளான (ஜூன்.2) நேற்று மேட்டூருக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரத்தொடங்கினர். பின்னர் அவர்கள் பூங்காவிற்கு சென்று பொழுதை போக்கினர். சிறுவர், சிறுமிகள் அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் ஏறி ஆனந்தமாக விளையாடினர். சிலர் மேட்டூர் அணைக்கட்டு முனியப்ப சாமியை தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து அணையின் வலது கரை பகுதியிலுள்ள பவளவிழா கோபுரத்திற்கு சென்று அணையின் அழகை கண்டுகளித்தனர்.

News June 3, 2024

நாகையில் மழை பெய்ய வாய்ப்பு!

image

சென்னை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்று(ஜூன் 3) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, அதாவது காலை 10 மணி வரை நாகப்பட்டினம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News June 3, 2024

திருவாரூரில் மழை பெய்ய வாய்ப்பு

image

சென்னை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்று(ஜூன் 3) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, அதாவது காலை 10 மணி வரை திருவாரூர் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News June 3, 2024

சென்னையில் மிதமான மழை பெய்யும்

image

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை பள்ளிக்கரணை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!